மாணவர்களின் ஸ்கேட்டிங் பயணத்திற்கு கைகொடுத்த MLA JCM…!

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில், இந்திய ரோலர் ஸ்கேட்டிங் கூட்டமைப்பு மற்றும் பாண்டிச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் இணைந்து நடத்தும் 13-வது Speed Ranking Championship 2026 ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.

இதன் தொடக்க விழாவில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், தனது மனைவி சிந்து ஸ்ரீ சார்லஸ் மற்றும் மகளுடன் கலந்து கொண்டு, போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

தொடர்ந்து, ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகளின் பயிற்சி மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், மார்டின் அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை, பாண்டிச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் சங்கத்தின் நிறுவனர் திருவேங்கடம் மற்றும் தலைவர் பழனி ஆகியோரிடம் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார்.

மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு ஆதரவுகளை வழங்கி வரும் மார்டின் அறக்கட்டளையின் இந்த பங்களிப்பு, ஸ்கேட்டிங் பயிலும் மாணவ, மாணவிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *