தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம்… சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்
அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வருகிறார்.
ஆளுநர் பங்கேற்ற சில நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்ட விவகாரம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதை இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ் மொழிக்கும், தமிழர் பண்பாடு மற்றும் அடையாளத்திற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடு என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வந்தே மாதரம் – தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான விவாதங்கள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதன்மை இடம் வழங்கும் இந்தத் தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

