‘வில்லியாகும் அலியா பாட்!’
பாலிவுட்டின் முன்னணி நடிகை ஆலியா பட்.
எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்” படத்தில் தென்னிந்திய திரையுலகில் அறிமுகமானார்.
வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் அவர், விரைவில் திரைக்கு வரும் ஸ்பை திரில்லர் கதைக்கொண்ட ‘ஆல்பா’ என்ற இந்தி படத்தில் சீக்ரெட்டான ஏஜென்ட் போல் இல்லாமல்,நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
‘பதான்’ ,’டைகர்’, ‘வார்’, ‘கபீர்’ போன்ற ஸ்பை யூனிவெர்ஸ் படங்களை தயாரித்து வரும் யஷ் ராஜ் பிலிம்ஸ் பட்டியலில் ஆல்பா படமும் இருக்கும் என்று உருவாக்கப்பட்டுள்ளது.இதில் பாபி தியோல்,அணில் கபூர்,மாதவன்,ஆகியோர் நடித்திருந்தாலும்,கதை ஹீரோயின் மையப்படுத்தியதாம்.

