சென்னையில் ஏற்பட்ட தீ விபத்து; 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதம்…

கரும்புகையால் பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி மக்கள் அவதி…

சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் அருகே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பகுதிக்கு அடுத்தடுத்து தீ பரவியது. இதில், 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

அவை பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் என்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன என்றும் கூறப்படுகிறது. கரும்புகை வான் வரை பரவியுள்ளது. இதனால், மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரியில் கரும்புகையால் மக்கள் அவதியடைந்து உள்ளனர். தீயை விரைந்து அணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், தீயணைப்பு வாகனங்கள் தண்ணீர் லாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் மாநகாட்சி ஆணையர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *