அனைத்து சிக்னல்களிலும் அரசு சார்பில் பசுமை பந்தல்கள்!

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து வாகன ஒட்டிகளை பாதுகாக்கும் வகையில் புதுச்சேரி நகர பகுதிகளில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் அரசு சார்பில் பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரி சாலைகளின் சந்திப்பில் உள்ள சிக்னல்களில் வாகன ஒட்டிகள் நிற்கும்போது வெயிலால் அவதிக்குள்ளாவர்கள் என்பதால் புதுச்சேரி அண்ணா சாலை, காமாரஜர் சாலை உள்ளிட்ட நகர பகுதிகளில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் பொதுப்பணித்துறை சார்பில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் கடந்த சில ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் சிகன்ல்களில் பசுமை பந்தல் அமைத்து வந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசே பசுமை பந்தல் அமைத்ததை அடுத்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அரசே பசுமை பந்தல் அமைத்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *