லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் தாய்மொழி மகத்துவ மாநாடு

லட்சிய ஜனநாயக கட்சியின் தாய்மொழி மகத்துவ முதல் மாநாடு லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மாட்டின் – அழைப்பு..

புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் தாய்மொழி மகத்துவ முதல் மாநாடு வரும் 21ஆம் தேதி மாலை 5 மணிக்கு சுண்ணாம்பாறு மேம்பாலம் அருகே உள்ள திடலில் சிறப்பாக நடைபெற உள்ளது.


இன்று மாநாடு மேடை அமைப்பதற்கு சிறப்பு பூஜை செய்து பந்தக்கால் நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து கூறுகையில்,
“வரும் 21ஆம் தேதி நடைபெறும் இந்த மாநாடு அரசியலைத் தாண்டி அமைந்த ஒன்று. உலகம் முழுவதும் உள்ள அனைத்து தாய்மொழிகளையும் போற்றும் உயர்ந்த நோக்கத்துடன், இறைவனின் அருளால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாய்மொழியின் சிறப்பை வெளிப்படுத்தி, அதன் மகத்துவத்தை மேம்படுத்தும் விளக்க நிகழ்வாக இது அமையும். எனவே புதுச்சேரியில் உள்ள அனைத்து மக்களும் எந்தப் பாகுபாடும் இன்றி இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.


தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் தலைவர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மாநாடு வெற்றி பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தனர்

நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர்கள் டாக்டர் துரைசாமி, பூக்கடை ரமேஷ், பாபு, பிரபாகரன், பரப்புரை பொதுச்செயலாளர் நடிகர் தாடி பாலாஜி, மண்டல பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *