காமராஜ் நகர் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த ஜோஸ் சார்லஸ் மார்டின்

காமராஜ் நகர் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த ஜோஸ் சார்லஸ் மார்டின்

புதுச்சேரி, அசாம், கேரளா ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் 9 ஆம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மூன்று மாநிலங்களிலும், வேட்பு மனு தாக்கல் கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது.

அம்மாநிலங்களில், வேட்புமனு தாக்கல் செய்ய, இன்று கடைசி நாளாகும். புதுச்சேரியில், மொத்தம் உள்ள 30 தொகுதிகளில், கடந்த 20 ஆம் தேதி வரை முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட 118 பேர் பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இன்று புதுச்சேரியில் NR காங்கிரஸ் கட்சி தலைமையிலான NDA கூட்டணியில் காமராஜ் நகர் தொகுதியில் தர்பூசணி சின்னத்தில் போட்டியிடும் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் இன்று மதியம் தனது ஆதரவாளர்களுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மேலும், அவர் கட்சியை சார்ந்த ஜெயக்குமார் என்பவர் நெல்லிதோப்பு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

கடைசி நாளான இன்று மட்டும் 326 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 30 தொகுதிகளில் மொத்தமாக 445 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *