ரூ.55 லட்சம் மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்த JCM
புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.55 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் சாலை, வாய்க்கால் மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவரும், காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் கலந்துகொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார்.
இப்பணிகள் நிறைவடைந்த பின்னர் அப்பகுதி மக்களுக்கு சாலை வசதி மேம்படுவதுடன், மழைநீர் வடிகால் மற்றும் குடிநீர் விநியோக வசதிகளும் மேம்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள், லட்சிய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர்கள் டாக்டர். துரைசாமி மற்றும் வழக்கறிஞர் பிரபாகரன், முன்னாள் எம்எல்ஏ ரிச்சர்ட் ஜான்குமார் மற்றும் உள்ளூர் நிர்வாக பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

