கரூரில் முதலமைச்சர் விஜய் பேசியவை | CM விஜய் | கரூர்

கரூருக்கு மக்களை பார்க்க சென்ற விஜய் அவரது உரையில் பேசிய முக்கியக் கருத்துக்கள்

என் நெஞ்சில் குடியிருக்கும் எனச் சொல்லி தனது உரையை தொடங்கினார் முதலமைச்சர் விஜய்.,

நாமக்கல் பயணத்தை முடித்து கரூர் வந்தபோது பிரச்னை எனில் காவல்துறை அலெர்ட் பண்ணியிருக்கலாமே… கரூரில் போலீஸ் சொன்னதை நான் நம்பினேன்; அதற்காக அவர்களுக்கு நன்றியும் சொன்னேன். என உணர்ச்சிமிக்க பேசினார்.

பணமா, ஜனமா என்று கேட்டால் நான் ஜனம் தான் முக்கியம் என உறுதியாக சொல்வேன். தொகுதி மறுவரையை தவெக அரசு ஒருபோதும் ஆதரிக்காது, கரூர் சதியை அடுத்த தலைமுறையும் அறியும் வகையில் தவெக சார்பில் கரூரில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இவ்வாறு பல விசயங்களை பற்றி பேசிய முதல்வர் விஜய் எப்பொழுதும் எல்லா கூட்டங்களிலும் செய்வது போல திமுக கட்சி, அதன் தலைவர்கள் மற்றும் அதன் முந்தைய ஆட்சி குறித்து கடுமையாக விமர்ச்சித்தார்.

சட்டப்பேரவையில் Party Fund என்றுதான் சொன்னேன்; எடுத்தாங்க பாருங்க ஒரு ஓட்டம்; குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் என்று விமர்சித்த அவர் விரைவில் தமிழக அரசின் விஸ்வரூபத்தை பார்ப்பீர்கள் என்றார்.

விஜய் அங்க போக கூடாது, இங்க போக கூடாது என சொல்றீங்களே; உங்க ஆட்சி வீட்டுக்கு போய் தவெக ஆட்சி வந்து ரொம்ப நாள் ஆச்சு என்று கடுமையாக சாடினார்.

மக்களே இந்த தீய சக்தி திமுகவை நல்லா வச்சு வெளுத்து விடுங்க; Confident-ஆ இருங்க; நல்லதே நடக்கும் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *