புதிய தொடரில் கமிட்டான திரிஷா | ‘சூப்பர் நேச்சுரல் திரில்லரில்’ நாயகி திரிஷா

துறையில் தொடர்ந்து வரும் நடிகை திரிஷா ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து தன் திரைப்பட வாழ்க்கையை தொடங்கிய இவர் தனது கடின உழைப்பால் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்ததில் சில படங்கள் இன்னும் வெளியாகாமல் பல ஆண்டுகளாக முடங்கி உள்ளன. அதுமட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நடித்து வரும் நிலையில் தமிழக அரசியலிலும் இவரது பெயர் அடிக்கடி அடிப்பட்டு வருகிறது.
இதையெடுத்து சினிமா வாழ்க்கையில் தொடர்வாரா என்று கேள்விக்குறியாக இருந்த நிலையில் புதிய வெப் தொடரில் திரிஷா நடிக்க உள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளன. மேலும் தொடர்ந்து ‘சூப்பர் நேச்சுரல் திரில்லர்’ (Supernatural Thriller) கதைகளத்தில் உருவாகும் இந்த வெப் தொடர், முற்றிலும் நாயகியைப் பிரதானப்படுத்தி (Female-centric) உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது….

