’செந்தமிழ் தேன் மொழியாள்’.. பாடகி ஜமுனா ராணி காலமானார்
தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி (88) நேற்று (ஜூலை 30) பெங்களூருவில் காலமானார்.
‘தியாகய்யா’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடகியாக நுழைந்தார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 6,000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.

தமிழில் ’செந்தமிழ் தேன் மொழியாள்’, ’சின்னச் சின்ன சிட்டு’, ’புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்’, ’உங்க மனசு ஒரு தினுசு’, ’குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே’, ’மாமா மாமா’, ’ஓ தேவதாஸ்’, ’பாட்டொன்று’ ’யாரடி நீ மோகினி’, ஆகியவை இவர் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது.
முக்கியமாக மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையில் ‘நாயகன்’ படத்தில் இடம் பெற்ற ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலைப் பாடியவரும் இவரே.
இந்திய திரையுலகில் பல மறக்க முடியாத பாடல்களை பாடிய ஜமுனா ராணி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



