நண்பன் ஒருவன் வந்த பிறகு | JioHotstar-ல் Friendship Day ஸ்பெஷல்

நண்பன் ஒருவன் வந்த பிறகு | JioHotstar-ல் Friendship Day ஸ்பெஷல்

அற்புதமான பிறப்பில் வாழ்க்கை பலவற்றை நமக்கு அள்ளித் தருகிறது. அதில் இன்னும் அற்புதமான ஒன்று தான் உண்மையான நட்பு

இந்த Friendship Day-யை முன்னிட்டு, நண்பர்கள், சகோதரத்துவம் மற்றும் மறக்க முடியாத பந்தங்களை கொண்டாடும் சிறப்பு வாட்ச் லிஸ்டை JioHotstar தொகுத்துள்ளது.

1. சஞ்சு (Sanju)

சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்த படம், உண்மையான நண்பன் யார் என்பதை நினைவூட்டுகிறது. எல்லா சிக்கல்களிலும் சஞ்சுவுக்கு துணையாக நிற்கும் கம்லியின் நட்பு, நட்பின் ஆழத்தை அழகாக வெளிப்படுத்துகிறது.

2. ஹாரி பாட்டர் (Harry Potter)

ஹாரி, ரான், ஹெர்மயோனி மூவரின் நட்பு, விசுவாசமும் ஒற்றுமையும் எந்த மந்திரத்தையும் விட வலிமையானது என்பதை உணர்த்துகிறது. குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் மீண்டும் ரசிக்க ஏற்ற ஒரு காலத்தால் அழியாத கிளாசிக்.

3. சிச்சோரே (Chhichhore)

கல்லூரி வாழ்க்கையின் கலகலப்பையும், விடுதி நண்பர்களின் மறக்க முடியாத பந்தத்தையும் கொண்டாடும் படம். பழைய நண்பர்களுடன் பார்க்கும்போது நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு சிறந்த தேர்வு.

4. செக்ஸ் அண்ட் தி சிட்டி (Sex and the City)

வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளில் தோழிகளின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் தொடர். நட்பே உண்மையான ‘சோல்மேட்’ என்பதை ஒவ்வொரு அத்தியாயத்திலும் சொல்லும் ரசிகர்கள் விரும்பும் கிளாசிக்.

5. ஃபைண்டிங் டோரி (Finding Dory)

நட்பு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் அன்புக்குரியவர்களிடம் திரும்பிச் சேரும் பயணத்தை சொல்லும் மனதை வருடும் அனிமேஷன் திரைப்படம். குடும்பத்துடன் ரசிக்க ஏற்ற ஒரு Feel-Good படம்.

6. ஃப்ரெண்ட்ஸ் (Friends)

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத தொடர். நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் மறக்க முடியாத நட்புகள் நிறைந்த Friends, Friendship Day கொண்டாட்டத்திற்கு சரியான தேர்வு.

இந்தநண்பர்கள் தினத்தில் உங்கள் நெருங்கிய நண்பர்களை அழைத்து, JioHotstar-ல் இந்த அற்புதமான நட்புக் கதைகளை ஒன்றாக ரசியுங்கள்! 💙

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *