‘ப்ளாஸ்ட்’ திரைப்பட விமர்சனம்.

ராஜாராம் (அர்ஜுன்) ஒரு கராத்தே மாஸ்டர். அவரது குடும்பமும் தற்காப்புக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள். ஒரு எதிர்பாராத சூழ்நிலையில் வில்லன் கும்பலால் இவர்களது குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான பிரச்சினை ஏற்படுகிறது. அந்த ஆபத்தில் இருந்து மொத்த குடும்பமும் தங்கள் தற்காப்புக் கலை திறனைப் பயன்படுத்தி எப்படி மீண்டு வருகிறார்கள், வில்லன்களை எப்படி வீழ்த்துகிறார்கள் என்பதே படத்தின் திரைக்கதை. இதில் சமூகம் குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தி இருக்கிறார் சுபாஷ் கே. ராஜ்.

கதையை பொருத்தவரை பழைய உத்திகளை கையாண்டு இருந்தாலும் கூட, பெண்களை மாஸ் பாணியில் சண்டை காட்சிகளில் காண்பித்த தமிழ் படங்கள் குறைவு என்பதால் அது புதிய உத்திகளில் ஒன்று என ஏற்றுக்கொள்ள முடிகிறது.

அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் முயற்சி சபிண்டை காட்சிகளில் காட்சியத்தமாக பொருந்தி நடித்ததின் மூலம் தெரிகிறது.

‘ஆக்சன் கிங் அர்ஜுன்’ என்ற பட்டத்திற்கு கராத்தே மாஸ்டராக கச்சிதமாகப் பொருந்தியுள்ளார் அர்ஜுன்.

2026-இல் வெளியாகவுள்ள ‘பிளாஸ்ட்’ (Blast) எனும் அதிரடித் திரைப்படத்தில், ‘சித்தப்பா’ கதாபாத்திரத்தை நடிகர் அர்ஜுன் சிதம்பரம் ஏற்று நடித்துள்ளார். அக்குடும்பத்திற்கு உதவும் வகையில் திடீரெனவும் ஈர்க்கும் வகையிலும் தனது தற்காப்புக் கலைத் திறன்களை வெளிப்படுத்திப் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் இந்தக் கதாபாத்திரம், ஒரு மறக்கமுடியாத ‘வைல்ட்கார்டு’ (wildcard) வருகையாக அமைகிறது.

இயக்கம் & திரைக்கதை: அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ், படம் துவங்கிய முதல் சில நிமிடங்களிலேயே கதையின் மையப்புள்ளிக்குச் சென்று திரைக்கதையை வேகமாக நகர்த்தியுள்ளார். ரவி பஸ்ரூரின் பின்னணி இசை ஆக்சன் கிங் காட்சிகளுக்கு நல்ல மாஸ் எனர்ஜியைத் தருகிறது. ஆனால் திரைக்கதையில் ட்விஸ்ட் சேர்க்க பல இடங்கள் இருந்தாலும் அதை செய்யாமல் கதையை கடத்தி இருக்கிறார் இயக்குனர்.ஒருவேளை அவரது படைப்பாற்றல் சொல்லும் படியான கதையைத்தான் வைக்க வேண்டும் என்பதற்க்காக இத்தகைய உத்தியை கையாண்டு இருந்திருக்கலாம்.

கதையில் வரும் யூகிக்கக்கூடிய காட்சிகள் படத்தின் தாக்கத்தை சற்று குறைக்கின்றன.

ஆக்‌ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாகப் கொடுத்துள்ளார் ஃபீனிக்ஸ் பிரபு. ஆகையால் அது இப்படத்திற்கு இன்னும் வலு சேர்க்கிறது.

சண்டை காட்சி படத்தின் டைட்டில் போல் ‘ப்ளாஸ்ட்’ தான்.

தனது அறிமுகப் படத்திலேயே இத்தகைய குடும்ப ஆக்சன் திரில்லர் கொடுத்திருப்பது பாராட்டத்தக்க விசயம்தான் எனவே தனது அடுத்தடுத்த படங்களில் இதே போல் கதைகளை கையாண்டால்… ஆக்சன் படங்களில் அசத்தும் குட்டி லோகேஷ் கனகராஜாக கூட வலம் வரலாம் போல் இருக்கிறது.

மொத்தமாக ‘ப்ளாஸ்ட்’ கமர்சியல் தியேட்ரிக்கல் படம்.

ஒட்டுமொத்தமாக, ஒரு குடும்பம் பார்க்கும் படியான கமர்ஷியல் ஆக்‌ஷன் படமாக ‘பிளாஸ்ட்’ அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *