நாகை செல்கிறார் தவெக தலைவர் விஜய்… பல்வேறு நிபந்தனைகளுக்கு மத்தியில் பிரசாரம்…
தவெக தலைவர் விஜய் இரண்டாம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்வதற்காக இன்று நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ‘மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்டம் பிரச்சாரங்களை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், விஜய்யின் பிரசாரத்தின்போது ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும்…
ஸ்பெயினுக்கு முதல் இளம் ராணி – புதிய வரலாறு
ஸ்பெயின் நாட்டின் அரச மரபில் முக்கிய திருப்பமாக, இளவரசி லியோனோர் எதிர்கால ராணியாக பொறுப்பேற்க உள்ளார். 150 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்பெயினை ஆளும் முதல் இளம் பெண் என்ற பெருமையை அவர் பெறுகிறார். அரச குடும்பத்தின் பாரம்பரிய நடைமுறைகளுக்கு ஏற்ப, அரசியல் மற்றும் ராணுவ பயிற்சிகளை அவர் மேற்கொண்டு வருகிறார். 20 வயதான லியோனோர், நாட்டின் எதிர்கால தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராகி வரும் நிலையில், இந்த நிகழ்வு ஸ்பெயின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க கட்டமாக பார்க்கப்படுகிறது .
LJK மகளிர் அணி சார்பில் பொங்கல் விழா – திருநங்கை சமூகத்துடன் கொண்டாட்டம்
புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் உள்ள அன்னலட்சுமி திருநங்கை சமூகத்துடன் இணைந்து, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் , ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின்படி மாநில மகளிர் அணி சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகளுடன் சேர்ந்து பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு, அவர்களுடன் அன்பும் ஒற்றுமையும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியின் போது திருநங்கைகளுக்கு புடவை, மளிகைப் பொருட்கள் மற்றும் காலண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பொங்கல் விழா முன்னெடுப்பு: முதலமைச்சரை சந்தித்த LJK தலைவர்
லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் வரும் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பொங்கல் விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் நேரில் சந்தித்தார்.இந்த சந்திப்பின் போது, பொங்கல் விழாவில் பங்கேற்குமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்த அவர், சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த மரியாதைச் சந்திப்பு, பொங்கல் விழா தொடர்பான அனுமதி மற்றும் ஒருங்கிணைப்பு குறித்து நல்ல…
இலங்கை கடற்படை கைது பிரச்சனைக்கு தீர்வு முயற்சி – LJK தலைவர் பேச்சுவார்த்தை
இலங்கை கடற்படையினரால் காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில், காரைக்கால் மீனவர்களின் பிரதிநிதிகள், இலங்கை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு, லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.இந்த பேச்சுவார்த்தையில், மீனவர் கைது சம்பவங்களை தடுக்கும் வகையில் மத்திய–மாநில அரசுகள், இலங்கை அரசு மற்றும் மீனவர் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு குழு அமைக்க…
புதுவையில் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி – LJK தலைவர் அறிவிப்பு
புதுவை , லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா, LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் நடைபெற்றது. விழாவில் 1000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கலந்து கொண்டு , 500 மண் பானைகளில் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். விழாவின் தொடக்கமாக, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குத்துவிளக்கேற்றி சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் பழங்குடியின மக்களுடன் இணைந்து மண் பானையில் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடினார். விழாவில்…
பழங்குடியின மக்களுடன் பொங்கல் விழா – குத்துவிளக்கேற்றி கொண்டாடிய LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்
புதுச்சேரியில், பழங்குடியின மக்களுடன் இணைந்து LJK கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார். விழாவின் தொடக்கமாக அவர் குத்துவிளக்கேற்றி, மண் பானையில் பொங்கல் வைத்து விழாவை ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சியில் பழங்குடியின மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு, பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். விழா முழுவதும் மகிழ்ச்சியும் ,உற்சாகமும் நிறைந்த சூழல் காணப்பட்டது. பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக தப்பாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன்,…
மகளிர் பிரீமியர் லீக்: டெல்லியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை
மகளிர் பிரீமியர் லீக் (WPL) T20 2026 தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸை எதிர்த்து அபார வெற்றி பெற்றுள்ளது. மும்பையில் நேற்று நடைபெற்ற தொடரின் 3-வது லீக் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதிரடியாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை குவித்தது. மும்பை அணியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சிறப்பான ஆட்டத்தை…
கிரிக்கெட் உலகில் புதிய உச்சம்: ரோஹித் சர்மாவின் சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனையை பதிவு செய்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா, தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் இந்த சாதனையை எட்டினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க வீரராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை இதுவரை வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் வைத்திருந்தார். 328 சிக்ஸர்கள்…
சேதுசெல்வம் – LJK தலைவர் சந்திப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய அக்கட்சியின் முன்னாள் துணைச் செயலாளரும், ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளருமான சேது செல்வத்தை, லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட அவ்வை நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். முன்னதாக சேதுசெல்வத்தின் இல்லத்திற்கு வருகை தந்த லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு, பட்டாசுகள் வெடித்து, மலர் தூவி உற்சாகமான வரவேற்பு…
பாதுகாப்பு காரணமாக சதுரகிரி கோவிலுக்குச் செல்ல தடை
விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவில் அமைந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு, மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களிலும், மழை பாதிப்பு இல்லாத சாதாரண நாட்களிலும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓடைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சதுரகிரி மலைப்பாதையில்…
க*சா பயன்பாடு அதிகரிப்பு – திமுக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
சென்னை கண்ணகி நகர் அருகே க*சா விற்பனையில் ஈடுபட்டதாக திமுகவைச் சேர்ந்த பெண் நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக , அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், க*சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஊக்குவிக்கும் திமுக அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகவும், குற்றப் பின்னணி உள்ளவரை முறையாக கண்காணிக்கத்…
சென்னையில் காங்கிரஸின் அமைதிப் போராட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மத்திய அரசு “வளர்ச்சியடைந்த பாரதம் வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (விபி–ஜி ராம் ஜி)” என மாற்றியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதாக கூறி, இந்த முடிவு ஏழை மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எதிரானது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.இந்த பெயர் மாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சி…
“இந்தியா இந்து நாடு; பிரதமரும் இந்துவே” – சர்ச்சை கருத்து
மராட்டியத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஓவைசி தெரிவித்த கருத்துகளுக்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிலளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, எந்த குடிமகனும் பிரதமராக பதவியேற்க முடியும் என்றும், அதற்கு சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இந்தியா ஒரு இந்து நாடு என்றும், இந்து நாகரிகத்தின் அடிப்படையில் வளர்ந்த நாடு என்றும் கூறிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, இந்தியாவின் பிரதமர்…
பி.எஸ்.எல்.வி. சி-62 தயாராகிறது : இன்று கவுண்ட்டவுன் தொடக்கம்
பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டின் ஏவலுக்கு தேவையான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இன்று காலை முதல் கவுண்ட்டவுன் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வானிலை மற்றும் தொழில்நுட்ப நிலைகள் சாதகமாக இருந்தால், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் இயங்காது: அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூன்று நாட்கள் கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும் என கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, ஜனவரி 16-ஆம் தேதி (திருவள்ளுவர் தினம்), ஜனவரி 26-ஆம் தேதி (குடியரசு தினம்) மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதி (வடலூர் வள்ளலார் நினைவு தினம்) ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீச்சு : பாதுகாப்பு காரணமாக விரைவு ரயில் நிறுத்தம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரத்தில் பலத்த காற்று வீசி வருவதால், அயோத்தியாவில் இருந்து வந்த விரைவு ரயில், மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது . இதனால் ரயில் போக்குவரத்தில் இடையூறு ஏற்படும் அபாயம் உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமை சீரான பின்னர் மட்டுமே ரயில் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் பாதுகாப்பாக இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இமாசலில் பஸ் விபத்து: 14 பேர் பலி; பிரதமர் இழப்பீடு
இமாசல பிரதேசத்தில் பயணிகள் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது . இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்து சென்று, மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்ததுடன்,…
சென்னையில் மர்மமாக சாகும் காகங்கள் – பீதியில் மக்கள்
சென்னை அடையாறு இந்திரா நகர் பூங்காவில் கடந்த சில நாட்களாக காகங்கள் மர்மமான முறையில் இறந்து வருகின்றன. வானில் பறந்துகொண்டிருந்த காகங்கள் திடீரென கீழே விழுந்து உயிரிழப்பதால் பூங்காவிற்கு வரும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பூங்கா காவலாளி குட்டி கூறுகையில், நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு முன்பே காகங்கள் விழுந்து இறக்கத் தொடங்கியதாகவும், தினந்தோறும் அதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார் . தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், செத்துப்போன காகங்களை சேகரித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்…
திருப்பூரில் முருகன் கோவிலில் போராட்டம்; 200 பேர் கைது
திருப்பூர் மாவட்டம், ஈட்டிவீரம்பாளையம் அருகே குமரன் குன்று முருகன் கோவிலை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் முயற்சி செய்த போது, மக்கள் மற்றும் இந்து முன்னணி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் தடுப்பு ஏற்படுத்திய நிலையில் இந்து முன்னணியினரும் போலீசாரும் மோதியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த மோதலில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட சுமார் 200 பேர்…
ஒரே பாறை, உலக சாதனை: 3,000 கி.மீ. பயணத்தில் உருவான மகா சிவலிங்கம்
பீகாரில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘விராட் ராமாயணக் கோயில்’ திட்டத்தின் முக்கிய கட்டமாக, 33 அடி உயரம் கொண்ட பெரிய சிவலிங்கம் பீகாரை சென்றடைந்துள்ளது. இந்த சிவலிங்கம், தமிழகத்தின் மகாபலிபுரத்தில் இருந்து சுமார் 3,000 கிலோமீட்டர் தூரம் பயணித்து அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நவம்பர் 21 அன்று மகாபலிபுரத்தில் தொடங்கிய இந்தப் பயணம், 96 சக்கரங்கள் கொண்ட சிறப்பு டிரக் மூலம் மெதுவாக கொண்டு செல்லப்பட்டது. சேதம் ஏற்படாமல் இருக்க, தினமும் 60 கி.மீ. மட்டுமே பயணிக்கப்பட்டது….
2026 விண்வெளிப் பயணம் ஆரம்பம்! 12-ஆம் தேதி புறப்படும் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி-C62
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), 2026 ஆம் ஆண்டுக்கான தனது முதல் விண்வெளி பயணமாக பி.எஸ்.எல்.வி–சி62 ராக்கெட்டை ஜனவரி 12 ஆம் தேதி காலை 10:17 மணிக்கு ஏவ உள்ளது. இந்த ஏவல், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து நடைபெற உள்ளது. இந்த ராக்கெட், குறிப்பிட்ட விண்வெளி திட்டத்தை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்பொழுது அனைத்து தொழில்நுட்ப சோதனைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக…
ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
மதுரை உயர்நீதிமன்ற கிளை, தமிழகத்தில் நடைபெறும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசு மேற்பார்வையில் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 15ஆம் தேதி நடைபெறவிருந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கிராம நிர்வாகம் நடத்த அனுமதி கோரி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டிகளை தனிநபர்கள் அல்லது உள்ளூர் குழுக்கள் நடத்துவதால் பல்வேறு சிக்கல்கள் உருவாகுகின்றது என்பதைக் கருத்தில் கொண்டு, அரசே நேரடியாக பொறுப்பேற்று போட்டிகளை நடத்துவது சிறந்தது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், அணிவகுப்பு, அவனியாபுரம், பாலமேடு மற்றும்…
சென்னை விமான நிலையத்தில் விரைவில் ஸ்மார்ட் ட்ராலிகள்
சென்னை விமான நிலையம் இனி ஸ்மார்ட் ட்ராலிகளுடன் பயணிகளை வரவேற்க தயாராகி வருகிறது. இந்த புதிய தொழில்நுட்ப வசதி, பயணிகளுக்கு விமான நிலையத்திற்குள் கடைகளில் ஷாப்பிங் செய்யவும், உணவகங்களில் சாப்பிடவும் உதவும். இந்த ஸ்மார்ட் ட்ராலிகள் , பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் . இவை சிறிய, தொழில்நுட்பம் நிறைந்த வண்டிகள். இவற்றில் ஒரு திரை பொருத்தப்பட்டிருக்கும். பயணிகள் தங்கள் போர்டிங் பாஸை இந்த திரையில் ஸ்கேன் செய்ய வேண்டும். அப்படி ஸ்கேன் செய்தவுடன், விமானம்…
2026 தேர்தல்: அதிமுக–பாஜக கூட்டணியில் அன்புமணி பாமக
சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே இறுதி பேச்சுவார்த்தை இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில், இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ம.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமதாஸ் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார் அன்புமணி ராமதாஸ் . இதன் மூலம் ராமதாஸ் விஜய் உடன்…
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க புதிய முறை அமல்!
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) பயணிகள் எதிர்கொள்ளும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் அதிகப்படியான கூட்டத்தை சமாளிக்க, தானியங்கி கட்டண வசூல் (AFC) கேட்கள் மற்றும் கூடுதல் கட்டண வசூல் கவுண்டர்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், அண்ணா நகர் கிழக்கு, ஷெனாய் நகர் உள்ளிட்ட முக்கிய நிலையங்களிலும் விரைவில் கூடுதல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன. தியாகராய கல்லூரி மெட்ரோ ரயில்…
தமிழகத்தில் பொங்கல் பரிசு நாளை முதல் விநியோகம்
பொங்கல் பரிசுத்தொகுப்பு உடன் ரூ.3,000 பரிசுத்தொகை விநியோகத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை ஆலந்தூரில் உள்ள நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்க உள்ளார். அதன் பின்பு மற்ற பகுதிகளிலும் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் தமிழகம் முழுவதும் அணைத்து வீடுகளுக்கும் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு – உத்திரபிரதேசம் மாநில வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில் இன்று சந்திப்பு டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் சாலையில் அமைந்துள்ளது பிரதமர்களுக்கான அதிகாரப்பூர்வ அரசு மாளிகை. அங்கு இன்று பிரதமர் நரேந்திர மோடியை உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் சந்தித்து சுமார் ஒரு மணி நேரங்களுக்கு மேல் நீண்ட ஆலோசனையை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையின் போது…
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினற்கு LJK சார்பில் நிதி உதவி
காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவர்கள் நேற்று முன்தினம் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேடு பகுதியில் மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்த அவர் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்….
LJK வில் இணைந்த பாஜக மகளிர் அணியினர்
காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பாஜக மகளிர் அணி மாவட்ட துணை தலைவி பிருந்தா முருகானந்தன் இன்று காலை லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து கட்சியில் இணைந்த நிலையில், அவரது தந்தை சேதுராமன் மற்றும் தங்கை தீபா ஆகியோரும் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து தங்களை லட்சிய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர். உடன் லட்சிய ஜனநாயக கட்சியின் மண்டல பொதுச்செயலாளர் அப்துல் பாஷித்,…
இலங்கை கடற்படையினரால் 3 பேர் கைது
காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 29ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 11 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை மீன் பிடித்து கொண்டிருந்த போது 11 காரைக்கால் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
தச்சங்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு
தமிழர்களின் கலாச்சார – பாரம்பரியத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுவதும் விமர்சையாக நடைபெற தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் வருகின்ற ஜனவரி 3ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அந்த போட்டியில் பங்கேற்க உள்ள காளையர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியது. வீரர்கள் டோக்கன்களை பெற முண்டியடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது….
புதுவையில் தொடரும் விபத்துக்கள் – மக்கள் அச்சம்
புதுவையில் தொடர் சாலை விபத்துகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுவை தவளக்குப்பம் அடுத்த அபிஷேகப்பாக்கம் சேத்திலால் நகரை சேர்ந்த விக்னேஷ், சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், ஊருக்கு வந்திருந்த நிலையில், நண்பர் தனுஷுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்திசையில் வந்த கேரளாவை சேர்ந்த சஞ்சய் குமாரின் பைக்குடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூவரும் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், விக்னேஷ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்….
LJK தலைவரின் மகளிருக்கான வாக்குறுதிகள் விளக்கம்!
லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் ஆலோசனைப்படி, உழவர்கரை தொகுதிக்குட்பட்ட உழவர்கரை பகுதி பெண்களுடன் சந்திப்பு நடத்திய கட்சியின் மகளிர் அணி தலைவி பிரபா தேவி லட்சிய ஜனநாயக கட்சியின் மகளிர் நலனுக்கான வாக்குறுதிகள் மற்றும் LJKவில் மகளிருக்கான முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து, அதே தொகுதிக்குட்பட்ட ஜவஹர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், லட்சிய ஜனநாயக கட்சியின் ஆறு முக்கிய மகளிர் திட்டங்கள் குறித்து அப்பகுதி மகளிர் குழு பெண்களிடம்…
லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் புத்தாண்டு வாழ்த்து!
கால் நூற்றாண்டுக்கும் மேலாக பின்தங்கி இருக்கும் புதுவையின் வளர்ச்சிக்கான காலம் கனிந்துள்ளது என லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2026 தேர்தலுக்கான களத்தில் லட்சிய ஜனநாயகக் கட்சி புதுவை மக்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது எனவும் லட்சிய ஜனநாயகக் கட்சிக்கும் இதுதான் புத்தாண்டு எனவும் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார் .
PAN-ஆதார் இணைப்புக்கு இன்றே கடைசி நாள் – வருமான வரித் துறை எச்சரிக்கை
PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே (31.12.25) கடைசி நாள் என வருமான வரித் துறை அறிவித்துள்ளது. இதுவரை PAN-ஆதார் இணைப்பை மேற்கொள்ளாதவர்கள், இன்றைக்குள் ரூ.1,000 தாமதக் கட்டணம் செலுத்தி ஆதார் எண்ணை PAN எண்ணுடன் இணைக்க வேண்டும் என வருமான வரித் துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் PAN-ஆதார் இணைப்பை செய்யத் தவறினால், PAN எண் செல்லாது (Inactive) என அறிவிக்கப்படும் என்றும், இதனால் வருமான வரி தொடர்பான சேவைகள், வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட…
இலங்கைக்கு எதிரான 5வது டி20 போட்டியிலும் இந்திய மகளிரணி வெற்றி – தொடரை முழுமையாக கைப்பற்றியது
இலங்கைக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய மகளிரணி வெற்றி பெற்று, தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இந்திய அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர் அரை சதம் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அவரது சிறப்பான ஆட்டத்துக்காக அவர் ஆட்ட நாயகி விருதைப் பெற்றார். மேலும், தொடரில் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக, தொடர் நாயகி விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம்,…
புத்தாண்டு கொண்டாட்டம் முன்னிட்டு சென்னையில் விரிவான போக்குவரத்து மாற்றங்கள் – காவல்துறை அறிவிப்பு
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை முக்கிய பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்கள் அமல்படுத்தப்படுவதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, காமராஜர் சாலையில் போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை இன்று இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும். மேலும், அனைத்து மேம்பாலங்களிலும் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள்…
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டல் – ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இன்று நள்ளிரவு கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்காக, தமிழகம், பெங்களூர், சென்னை, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருகை தருகின்றனர். இதனால் புதுச்சேரி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரை சாலை பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். மேலும், காலை…
H-1B விசாவுக்கு தடை: டிரம்ப் அறிவிப்பு – இந்தியாவில் 32 ஆயிரம் பேரை பணியமர்த்திய அமெரிக்க நிறுவனங்கள்
H-1B விசாவிற்கு தடை விதிக்க இருப்பதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்களின் அமெரிக்க வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே, Meta, Apple, Google, Amazon, Microsoft, Netflix உள்ளிட்ட முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியாவில் மொத்தம் 32 ஆயிரம் பேரை பணியில் அமர்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், 32 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவிற்கு சென்று வேலை செய்வதற்குப் பதிலாக, இந்தியாவிலிருந்தே அமெரிக்க நிறுவனங்களுக்கு சேவை…
9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு
தமிழக அரசில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய பணியிடமாற்றங்களை மேற்கொண்டு அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக பணியாற்றி வந்த சத்யபிரத சாகு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையராக இருந்த பழனிசாமி, கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராக பணியாற்றிய கஜலட்சுமி, நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்….
தூய்மை பணியை தனியாருக்கு ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு – அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது
சென்னை அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்களின் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவை கண்டித்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணியாக சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூய்மை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும், கைது செய்ய மறுத்து சாலையில் வாகனங்களின் அடியில் படுத்து உருண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்….
புதுவையில் போலி மாத்திரை விவகாரம்: மருந்தகங்கள் முற்றுகை – அதிமுக கடும் கண்டனம்
புதுச்சேரி:புதுச்சேரியில் போலி மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகார் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 13 குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. புதுவை அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில் பல்வேறு இடங்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி புஸ்ஸி வீதியில் செயல்பட்டு வந்த ‘செம்பருத்தி மருந்தகம்’ மற்றும் ‘ஸ்ரீ குகா மருந்தகம்’ ஆகியவற்றில் போலி மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து,…
“அதிமுக மக்களுக்கு அடிமையாக இருக்கும் கட்சி” – கோவையில் அண்ணாமலை பேச்சு
கோவை கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்தார். அவரது பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேச்சின்போது அண்ணாமலை கூறுகையில்,“என்னைப் பொறுத்தவரை அதிமுக ஒரு அடிமைக் கட்சிதான். ஆனால் அது யாருக்கும் அல்ல; மக்களை எஜமானர்களாக மதித்து, மக்களுக்கு அடிமையாக இருக்கும் கட்சி அதிமுக” என தெரிவித்தார். மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) குறித்தும் அவர்…
Recap of 2025: அரசியல் மாற்றங்கள், பேரிடர்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் – இந்தியாவையும் உலகையும் உலுக்கிய ஆண்டு
2025 ஆண்டு இந்தியாவுக்கும் உலகுக்கும் பல்வேறு வகையில் மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. அரசியல் களத்தில் புதிய கட்சிகள், அதிர்ச்சியூட்டிய குற்றச் சம்பவங்கள், இயற்கை பேரிடர்கள், பாதுகாப்பு மற்றும் சைபர் அச்சுறுத்தல்கள் என பல நிகழ்வுகள் மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அரசியல்: புதிய கட்சிகள், புதிய அரசியல் போக்கு 2025 ஆம் ஆண்டில் தமிழ் திரையுலக நடிகர் விஜய் அரசியலில் முழுமையாக களமிறங்கி, புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். அவரது அரசியல் பயணம் தமிழக…
கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம் திறப்பு – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைப்பு
கோவையில் சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானம் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த மைதானத்தை திறந்து வைத்தார். ஆர்.எஸ்.புரம் பகுதியில், ரூ.9.67 கோடி மதிப்பீட்டில், 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. வீரர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், செயற்கை புல்வெளி (Artificial Turf) உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஹாக்கி போட்டிகளை…
பொங்கல் பரிசுத் தொகுப்பு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2.22 கோடி குடும்பங்கள் பயன்
தமிழகத்தில் வரவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர். இதற்காக மொத்தமாக 22,291 டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்பில், பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட உள்ள நிலையில், பொங்கல் வேட்டி மற்றும் சேலை கொள்முதல் பணிகள் 85…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் கடும் சரிவு
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. சவரனுக்கு ரூ.3,360 குறைந்ததால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,00,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையும் ரூ.420 குறைந்து, இன்று ரூ.12,600 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தங்க விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் குறைவு, நகை வாங்குவோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.23 குறைந்து, இன்று ரூ.258க்கு…
புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் நள்ளிரவு வரை இயங்கும் மதுபான கடைகளுக்கு கூடுதல் கட்டணம் – கலால் துறை அறிவிப்பு
புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, புதுச்சேரியில் மதுபான கடைகள் மற்றும் பார்கள் நள்ளிரவு வரை இயங்க அனுமதி வழங்கப்படுவதாக கலால் துறை அறிவித்துள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட விற்பனையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலால் துறை அறிவிப்பின் படி, பார் வசதி இல்லாத சில்லறை மதுபான விற்பனை கடைகள் இரவு 11.30 மணி வரை இயங்க ரூ.10,000 கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல், பார் வசதியுடன் கூடிய சில்லறை விற்பனை கடைகள், வழக்கமான நேரத்துக்கு மேலாக கூடுதலாக…
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் லட்சிய ஜனநாயக கட்சியின் வாக்குறுதி விளக்கக் கூட்டம்
புதுச்சேரி லட்சிய ஜனநாயக கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தீர்மானங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை தொகுதியில் விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெருமளவில் மகளிர் மற்றும் சுயஉதவி குழு பெண்கள் கலந்து கொண்டு, கட்சியின் இலட்சியங்கள் மற்றும் பெண் இலட்சியத் தலைவர்களின் பெயரில் அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து விரிவான விளக்கங்களை கவனத்துடன் கேட்டனர். விளக்க உரை நிகழ்ச்சியில் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று, கட்சியின் செயல்பாடுகளை பாராட்டினர். கூட்டத்தில் கலந்து கொண்ட மகளிர்,…
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு, முதன்மை வைணவ திருத்தலமான திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறக்கப்பட்டது. பரமபத வாசல் வழியாக எழுந்தருளிய ஸ்ரீ ரங்கநாத பெருமாளை, “கோவிந்தா… கோவிந்தா…” என்ற கோஷங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் திரண்டதால், சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, பாதுகாப்பு மற்றும் கூட்ட…
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலமானார்
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், தேசத்தின் தலைவருமான கலிதா ஜியா (80) உடல்நலக் குறைவால் காலமானார். நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த கலிதா ஜியா, மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்ததாக வங்கதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவரது மறைவுச் செய்தி வங்கதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த கலிதா ஜியா, நாட்டின் முன்னாள் பிரதமராக பதவி வகித்து, பல்வேறு முக்கிய அரசியல்…
புடின் வீடு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் முயற்சி ? – ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வசிப்பிடத்தை இலக்காகக் கொண்டு உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த தாக்குதல் முயற்சியில் உக்ரைன் தரப்பில் இருந்து 91 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட இருந்ததாகவும், அவற்றை ரஷ்யாவின் வான் பாதுகாப்புப் படை முற்றிலும் அழித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் முயற்சி தோல்வியடைந்ததால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ரஷ்யாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உக்ரைன் அரசு இந்த…
ஒரு சிகரெட் ரூ.72 உயர்வு.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள கலால் சட்டத்திருத்தத்தால், புகையிலைப் பொருட்களின் விலை கணிசமாக உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் காரணமாக, தற்போது ரூ.18க்கு விற்பனை செய்யப்படும் ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 வரை உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், மெல்லும் புகையிலைக்கு விதிக்கப்படும் வரியும் தற்போதுள்ள 25 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம் புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக…
கரூர் விஜய் பிரச்சார கூட்டம் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணை
கரூர் விஜய் பிரச்சார கூட்டத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், டெல்லியில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) அலுவலகத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக, த.வெ.க. (தமிழக வெற்றி கழகம்) தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடமும் சிபிஐ அதிகாரிகள் டெல்லி அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள்…
LJK வாக்குறுதிகள் விளக்கவுரை கூட்டம் வில்லியனூரில் நடைபெற்றது
வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆத்துவாய்க்கால்பேட்டில், LJK கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பான விளக்கவுரை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்களுக்கு வாக்குறுதிகளின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. வில்லியனூர் JCM மன்றத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சமூக சேவகி கிரிஜா விளக்கவுரையை தொகுத்து வழங்கினார். அவர், மக்களின் அன்றாட தேவைகள், பெண்களின் முன்னேற்றம் மற்றும் சமூக நலத்திட்டங்கள் குறித்து வாக்குறுதிகள் எவ்வாறு அமையவுள்ளன என்பதை தெளிவாக எடுத்துரைத்தார்….
உலகின் பழமையான மொழி தமிழ்: பிரதமர் மோடி பெருமிதம்
உலகிலேயே பழமையான மற்றும் செழுமையான மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 129-வது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தமிழ் மொழியின் தொன்மை மற்றும் அதன் பண்பாட்டு முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அங்குள்ள மக்கள் தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் மீது பெரும் ஈர்ப்பு காட்டி வருவதாகவும் பிரதமர் மோடி…
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க இதுவரை 4.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் தேர்தல்களை முன்னிட்டு, தகுதி பெற்ற புதிய வாக்காளர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மற்றும் நேரடி முறைகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், சில பகுதிகளில் படிவங்கள் சரியாக பெறப்படாதது மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஊரக பகுதிகளில் படிவம் கொடுப்பதில் குழப்பங்கள் நீடிப்பதால்,…
மீண்டும் கீழடி அகழாய்வு: 11-ஆம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற உள்ள 11-ஆம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது. உலகளவில் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை வெளிப்படுத்திய முக்கியமான ஆய்வு தளமாக கீழடி கருதப்படுகிறது. இதற்கு முன் நடைபெற்ற அகழாய்வுகளில், நகர்ப்புற திட்டமிடல், சுடுமண் பாத்திரங்கள், கட்டிட அமைப்புகள், எழுத்துச் சான்றுகள் உள்ளிட்ட பல முக்கியமான தொல்லியல் ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சங்ககால தமிழர் நாகரிகம் மிக உயர்ந்த நிலையில் இருந்ததை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. தற்போது ஜனவரி…
நெடுந்தீவு அருகே மீன்பிடித்த போது கைது – ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறை
ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டி இலங்கை கடற்படை கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட மூன்று மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம், ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடைபெறும் கைது நடவடிக்கைகள்…
கோவிலில் திருப்பணிக்காக LJK தலைவர் நிதியுதவி – புதுவையில் நிகழ்ச்சி
புதுவை பாகூர் தொகுதி பரிக்கல்பட்டு அம்மன், வக்காளியம்மன் கோவிலில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளுக்காக லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்ல்ஸ்மார்டின் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கோவில் திருப்பணிக்குழுவினரிடம் நிதி உதவியை LJK தலைவர் ஜோஸ் சார்ல்ஸ்மார்டின் நேரில் வழங்கினார். கோவிலின் அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் திருப்பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்காக இந்த உதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், லட்சிய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் மற்றும் பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை…
மக்களுக்குக் நாள்காட்டி வழங்கிய LJK தலைவர் – புதுவையில் நிகழ்ச்சி
புதுவை வில்லியனூர் தொகுதியில், லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்ல்ஸ்மார்டின் சார்பில் பொதுமக்களுக்கு நாள்காட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2026 ஆம் ஆண்டுக்கான நாள்காட்டி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், நிகிழ்ச்சியில் பொதுச்செயலாளர் பூக்கடை ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். கட்சியின் சமூக நலப்பணிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி தொடர்ந்து பல்வேறு உதவித் திட்டங்களை…
புதுவை மூலக்குளம் பகுதியில் தனியார் கராத்தே பயிற்சி பள்ளி தொடக்கம்
புதுவை மூலக்குளம் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட தனியார் கராத்தே பயிற்சி பள்ளி, லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்ல்ஸ்மார்டின் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த தொடக்க நிகழ்ச்சியில், நிகேஷ்சியில் JCM மக்கள் மன்ற தலைவர் ரிகன் ஜான்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டு, நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பள்ளியின் தொடக்கம், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே தற்காப்புக் கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது. கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலை…
திருப்பதி ஏழுமலையான் கோயில்: சொர்க்க வாசல் தரிசனத்திற்கு டிக்கெட் கட்டாயம் – தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் சொர்க்க வாசல் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, டிசம்பர் 30 மற்றும் 31, மேலும் ஜனவரி 1 ஆகிய மூன்று நாட்களில் சொர்க்க வாசல் தரிசனம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு தரிசனத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் கட்டாயம் என தேவஸ்தானம் தெளிவுபடுத்தியுள்ளது. டிக்கெட்டுகள் இன்றி திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய…
வலுவான எதிரிகள் வேண்டும்! – விஜய் அரசியல் சவால்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் தவெக (TVK) தலைவருமான விஜய், தனது ரசிகர்கள் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். நீண்ட ஆண்டுகளாக தன்னைத் தொடர்ந்து ஆதரித்து வரும் ரசிகர்களுக்காகவே தனது எதிர்கால முடிவுகள் அனைத்தும் என அவர் தெரிவித்தார். “முதல் நாளிலிருந்து என்னோடு தொடர்ந்து நிற்பவர்கள் என் ரசிகர்கள்தான். ஒரு நாள், இரண்டு நாள் அல்ல; கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் என்னோடு இருந்துள்ளனர். அதனால் அடுத்த 30 அல்லது 33 ஆண்டுகளுக்கும் அவர்களோடு நான் நிற்க…
கேப்டன் விஜயகாந்த்: திரையுலகிலிருந்து அரசியல் வரை – ஒரு போராளியின் பயணம்
தமிழ் திரையுலகிலும் தமிழக அரசியலிலும் தனித்துவமான முத்திரை பதித்தவர் கேப்டன் விஜயகாந்த். நடிகர், அரசியல்வாதி, மக்கள் தலைவன் என பல அடையாளங்களுடன் வாழ்ந்த அவரது வாழ்க்கை, எளிய மக்களின் நம்பிக்கையாகவும் போராட்டக் குரலாகவும் அமைந்தது. 1952 ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் பிறந்த விஜயகாந்த், ஆரம்பத்தில் சினிமா மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக தமிழ் திரையுலகில் காலடி வைத்தார். 1979ஆம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், 1980–90களில் ஆக்ஷன் ஹீரோவாக…
கேரளா: பாலா நகராட்சியில் இளமையின் சாதனை – 21 வயது தியா பினு நகராட்சித் தலைவராகத் தேர்வு
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா நகராட்சியில் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. 21 வயதேயான தியா பினு, சுயேட்சையாகப் போட்டியிட்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் ஆதரவுடன் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்தேர்தல் வெற்றியின் மூலம், தியா பினு கேரளாவின் முதல் Gen Z (1997க்கு பிந்தைய தலைமுறை) நகராட்சித் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இளம் வயதிலேயே நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள அவர், இளைஞர்களின் அரசியல் பங்கேற்புக்கு புதிய ஊக்கமாக விளங்குகிறார். தேர்தல்…
முதியோர் இல்லத்துக்கு டிவி வழங்கி மனிதநேய உதவி செய்த LJK தலைவர்
புதுவை பாஜக பிரமுகரும், கலை முதியோர் இல்லத்தின் நிர்வாகியான கணேசன் – பாஜகவிலிருந்து விலகி LJK-வில் இணைந்துள்ள நிலையில், அவரது சமூக சேவைகளை பாராட்டும் வகையில் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மனிதநேய உதவிகளை வழங்கினார். அவரது சேவையை பாராட்டி, கலை முதியோர் இல்லத்திற்கு ஒரு டிவியை LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார். சமூகப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கணேசனின் சேவைகளை பாராட்டிய ஜோஸ் சார்லஸ் மார்டின், “சமூகத்தில் நலிந்தவர்களுக்கு உதவுவது…
கோ-கோ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்
புதுவை கோ-கோ அமெச்சூர் அசோசியேஷனைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வரும் 9ஆம் தேதி தெலுங்கானாவில் நடைபெற உள்ள சீனியர் தேசிய கோ-கோ போட்டியில் புதுவையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், போட்டிக்கு முன்னதாக LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர். அப்போது அவர், தேசிய அளவிலான போட்டியில் சிறப்பாக விளையாடி, புதுவைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என வீரர்களுக்கு உற்சாக வார்த்தைகளை தெரிவித்தார். வீரர்களின் இந்த சாதனை…
மலேசியாவிலும் ‘TVK’ முழக்கம் – ரசிகர்களிடையே உற்சாகம்
மலேசியாவிலும் ‘TVK’ முழக்கம் – அரங்கம் முழுவதும் உற்சாக அலை மலேசியாவில் தற்போது நடைபெற்று வரும் பிரம்மாண்டமான பொது நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்று வருகிறார். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டுள்ள இந்த நிகழ்ச்சி, பெரும் உற்சாக சூழலில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி அரங்கில் நடிகர் விஜய் தோன்றியதுமே, ரசிகர்கள் “TVK… TVK…” என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த முழக்கங்கள் அரங்கம் முழுவதும் எதிரொலித்து, நிகழ்ச்சியின் சூழலை மேலும் உற்சாகமாக மாற்றியுள்ளது. விஜயின் அரசியல்…
LJK | முருகன் கோவில் திருப்பணிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை
புதுவை உழவர்கரை தொகுதியில் உள்ள ரெட்டியார்பாளையம் புதுநகர் ஸ்ரீசக்திவேல் முருகன் ஆலயத்தின் திருப்பணிகளுக்காக ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. இந்த நன்கொடையை ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின். முருகன் கோவிலின் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்கொடை வழங்கும் நிகழ்வில் ஆலய நிர்வாகிகள், பகுதி பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு, ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு நன்றியை தெரிவித்தனர். இந்த…
புது வரலாறு படைத்த ஹர்மன்ப்ரீத் கெளர்!
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பதிவு செய்துள்ளார். கேப்டனாக அவர் தலைமையில் இந்திய மகளிர் அணி 77 வெற்றிகளை பெற்றுள்ளதன் மூலம், டி20 சர்வதேச போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன் என்ற சாதனையை ஹர்மன்ப்ரீத் கெளர் கைப்பற்றியுள்ளார். இதுவரை இந்த சாதனையை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லானிங் வைத்திருந்தார். அவர் தலைமையில் ஆஸ்திரேலியா அணி 76 வெற்றிகளை பதிவு செய்திருந்தது. தற்போது…
LJKவுக்கு படையெடுக்கும் மகளிர் குழுவினர்.
புதுவை லாஸ்பேட்டை சட்டமன்றத் தொகுதியில், ராஜசேகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர், லட்சிய ஜனநாயக கட்சி (LJK)யில் இணைந்தனர். இவர்கள் அனைவரும், LJK கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து, கட்சியின் கொள்கைகளில் நம்பிக்கை தெரிவித்து, அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு, புதிய உறுப்பினர்களை வரவேற்றனர்.
LJK | Pondicherrry |புதுவைக்கு நல்ல மாற்றம் வரட்டும் : LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு நன்றி
புதுவையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்தவ குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய LJK கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு, புதுச்சேரி பாஸ்டர்ஸ் அசோசியேஷன் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது, “புதுவைக்கு நல்ல மாற்றம் வரட்டும்” என வாழ்த்துகளை தெரிவித்த அவர்கள், மக்கள் நலனுக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
LJK வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
புதுச்சேரி: புதுவை லாஸ்பேட் சட்டமன்றத் தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வேல்முருகனும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ராஜேஷும், LJK கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து, அந்தக் கட்சியில் இணைந்தனர். மேலும், தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் சுப்ரமணி உள்ளிட்ட பலரும் LJK கட்சியில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு நிகழ்வின் போது, LJK கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
போராட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது.
தமிழக அரசு பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு வகை ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வேறு வகை ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டதால், ஒருநாள் வித்தியாசத்தால் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த ஊதிய முரண்பாட்டால் சுமார் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைமையை நீக்கி, ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் நீண்ட…
மீனவ பெண்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்- LJK தலைவர்
சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு சின்னத்தில் லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அஞ்சலி செலுத்தினார். புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு சின்னத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தார். இதனைத் தொடர்ந்து, வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவ பெண்களுடன் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து நேரில் கேட்டறிந்தார். மீனவர்களின்…
ஜனவரி 20ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது
2026ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆளுநர் ஒப்புதலை தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூடும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். புதிய ஆண்டின் முதல் கூட்டத்தொடராக நடைபெறும் இந்த சட்டப்பேரவை அமர்வில், முக்கிய அரசியல் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாநிலத்தின் வளர்ச்சி, மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் பொருளாதார நிலை…
LJK சார்பில் சுனாமி நினைவுதின அஞ்சலி: 21ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
21ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு லட்சிய ஜனநாயக கட்சி (LJK) சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில், கட்சியின் நிர்வாகிகள் புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில், சுனாமியில் உயிரிழந்தவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இவ்வகையான பேரழிவுகள் மீண்டும்…
தந்திரயான் குப்பம் கடலில் குளிக்க சென்ற மாணவன் பலி: உடல் முத்தியால்பேட்டை அருகே கரை ஒதுங்கியது
புதுச்சேரி அருகே தந்திரயான் குப்பம் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது மாயமான 10ம் வகுப்பு மாணவரின் உடல், முத்தியால்பேட்டை அருகே கரை ஒதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. புதுச்சேரி முத்தியால்பேட்டை மணிக்கூண்டு பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் பெயின்டர் தொழில் செய்து வருகிறார். அவரது மகன் பரணிதரன், முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். தற்போது அரையாண்டு விடுமுறை என்பதால், நேற்று முன்தினம் காலை பெற்றோருக்கு தெரியாமல், தனது…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை உயர்வு: சவரன் ரூ.1,03,120-க்கு விற்பனை
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்து ரூ.1,03,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.12,890-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த நாட்களுடன் ஒப்பிடும்போது தங்க விலையில் ஏற்பட்ட இந்த உயர்வு, நகை வாங்குவோரிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. இதனிடையே, வெள்ளி விலையும் உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.9 உயர்ந்து ரூ.254-க்கு விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க…
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ்: கேரளா மாணவர் கைது
புதுச்சேரி சின்ன காலாப்பட்டில் செயல்பட்டு வரும் மத்திய பல்கலைக்கழகமான புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், போலி கல்விச் சான்றிதழ் சமர்ப்பித்து மேற்படிப்பிற்காக விண்ணப்பித்ததாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த சித்தீக் என்பவர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பிற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த பல்கலைக்கழக நிர்வாகம், அவர் சமர்ப்பித்திருந்த இளநிலை கல்வி கல்லூரி சான்றிதழ் போலியானது என்பதை கண்டறிந்தது. இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரி வம்சீதர ரெட்டி,…
2036க்குள் நிலவில் அணுமின் நிலையம்: ரஷ்ய விண்வெளி நிறுவனம் அறிவிப்பு
2036ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின் நிலையம் Nuclear Power அமைக்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் ‘ரோஸ்கோஸ்மோஸ்’ (Roscosmos) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நிலவில் அமைக்கப்படும் இந்த அணுமின் நிலையம், எதிர்காலத்தில் சர்வதேச அளவிலான நிலவு ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்குவதற்கான முக்கிய அடித்தளமாக இருக்கும் என ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நிலவில் நீண்டகால மனித வாழ்வு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்குத் தேவையான மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த அணுமின் நிலையத்தின் மூலம்,…
உலக அழிவு தள்ளிவைப்பு: கானா நபரின் தீர்க்கதரிசனத்தில் திடீர் மாற்றம்
கானா நாட்டைச் சேர்ந்த எபோ நோவா (Ebo Noah) என்பவர், தன்னைத் தானே தீர்க்கதரிசி என அறிவித்து, 2025 டிசம்பர் 25ஆம் தேதி முதல் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் உலகம் முழுவதும் அழிவைச் சந்திக்கப் போவதாக பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த அழிவில் இருந்து மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக, கடவுளின் உத்தரவின் பேரில் பைபிளில் குறிப்பிடப்படுவது போல 8 பெரிய பேழைகளை (கப்பல்கள்) கட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார். எபோ நோவாவின் இந்த அறிவிப்பை நம்பிய பலர்,…
ஆசிரியர்கள் போராட்டத்தில் போலீசார் வாக்குவாதம்
புதுவையில் கல்வித்துறை வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆசிரியர்களின் போராட்டத்தின் போது, போலீசாருக்கும் போராட்டக்கார ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கல்வித்துறை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து, ஆசிரியர்கள் வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார், அவர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்ட நிலையில், போராட்டத்தை கைவிட்டு கலைந்து போகக் கூறியதாக தகவல்…
இடியாப்பம் விற்பனைக்கு இனி உரிமம் கட்டாயம்
சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்யும் வியாபாரிகள், இனி உரிய உரிமம் பெற்ற பின்னரே விற்பனை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. உணவின் தரம் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமத்தை ஆன்லைன் மூலம் இலவசமாக பெறலாம் எனவும் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெறப்படும் உரிமம் ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில பகுதிகளில் தரமற்ற இடியாப்பங்கள்…
LJKவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
காரைக்கால் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர், பாஜக தெற்கு பூத் தலைவர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர், லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களை நேரில் சந்தித்து, தங்களை அதிகாரப்பூர்வமாக LJK கட்சியில் இணைத்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது, LJK கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் விளக்கமளித்தார். மேலும், கட்சியின் வளர்ச்சிக்கும் மக்கள்சேவைக்கும் புதிய உறுப்பினர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என…
இந்தியாவின் கவலைக்கு தாய்லாந்து பதில்
கம்போடியா எல்லையில் அமைந்துள்ள விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரம், தாய்லாந்து வீரர்களின் இழப்புகளோடு ஒப்பிடமுடியாது என தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, இந்தியா தனது கவலைகளை வெளிப்படுத்திய நிலையில், அதற்கு பதிலளித்த தாய்லாந்து அரசு, இந்த நடவடிக்கை ஒரு அவமதிப்பாக கருதக் கூடாது என விளக்கம் அளித்துள்ளது. மேலும், கம்போடியா உடனான தங்களின் இருதரப்பு பிரச்சனையின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்திய தலையீடு இதில் அவசியமில்லை என தாய்லாந்து…
LJK தலைவருக்கு விளையாட்டு வீரர்கள் நன்றி
மகாராஷ்டிராவில் டிசம்பர் 12 முதல் 14 வரை நடைபெற்ற தேசிய அளவிலான கயிறு தாண்டல் (Rope Skipping) சாம்பியன்ஷிப் போட்டியில் புதுவையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று, சிறப்பாக விளையாடி பரிசுகளை வென்றனர். இந்த போட்டியில் பங்கேற்பதற்காக தேவையான நிதி உதவியை வழங்கிய லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களை, வெற்றி பெற்ற வீரர்கள் நேரில் சந்தித்தனர். அப்போது, தாங்கள் வென்ற பரிசுகள் மற்றும் பதக்கங்களை காண்பித்து, அவருக்கு நன்றியை தெரிவித்தனர்….
புதுச்சேரியில் லெனின் சிலை தார்ப்பாயால் மூடல் – போலீஸ் பாதுகாப்பு தொடர்ச்சி
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், நகர்ப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த லெனின் சிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தார்ப்பாய் கொண்டு முழுமையாக மூடியுள்ளனர். தொடர்ந்து, அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட லெனின் வீதியில், மணிமேகலை அரசு பள்ளி அருகே, கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென லெனின் சிலையை நிறுவியதாக கூறப்படுகிறது. இதற்கு, நீதிமன்ற உத்தரவின்படி புதிய சிலைகள் அமைக்கக்…
LJK தலைவர் விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி
புதுவை அமெச்சூர் ரோல் பால் அசோசியேஷன் சார்பில், புதுவை வீரர்கள் வரும் 2025 ஜனவரி 29 முதல் ஜனவரி 1 தேதி வரை ஜம்முவில் நடைபெறவுள்ள 17வது ஜூனியர் நேஷனல் ரோல் பால் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கின்றனர். இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு தேவையான ஊக்குவிப்பு மற்றும் பயணச் செலவுகளுக்காக, ஜர்சி மற்றும் பயண செலவுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த நிதியுதவியை அனுப்பி வைத்தவர் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள்….
மலேசியாவில் நடைபெறும் ‘தளபதி கச்சேரி’ விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள்
கோலாலம்பூர்:மலேசியாவில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ள ‘தளபதி கச்சேரி’ விழாவை முன்னிட்டு, விழா நடைபெறும் மைதானத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை காரணங்களுக்காக இந்த நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு விழா மைதானத்திற்குள் அனுமதி வழங்கப்படாது. மேலும், ஒருமுறை மைதானத்திற்குள் நுழைந்து வெளியே சென்றால், மீண்டும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, உணவுப் பொருட்கள், மது வகைகள் (ஆல்கஹால்),…
பணி நிரந்தரம் கோரி புதுச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
புதுச்சேரி:பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்கள் இன்று புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். புதுச்சேரியில் கடந்த 2020ஆம் ஆண்டு, அந்நேரம் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், வேலைவாய்ப்பு அலுவலகம், தகுதி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் 288 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நிதி நிலைமையை காரணமாகக் காட்டி, அவர்களை அரசு ஒப்பந்த முறையில் பணி அமர்த்தியது. இதனைத் தொடர்ந்து, இவர்களின் ஒப்பந்தம் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில், தங்களை நிரந்தரமாக்க…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை உயர்வு
சென்னை:சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து, ரூ.1,02,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து, ரூ.12,820-க்கு விற்பனையாகிறது. இதனிடையே, வெள்ளி விலையும் உயர்வு கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து, ரூ.245-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்ட இந்த மாற்றம், நகை வாங்குவோரிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
கிறிஸ்துமஸ் விழா: கதீட்ரல் தேவாலயத்தில் பிரதமர் மோடி சிறப்பு பிரார்த்தனை
டெல்லி:கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்திற்கு சென்று சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டார். கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் நாளில், பொதுமக்களுடன் இணைந்து கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற கூட்டுத் திருப்பலியில் பிரதமர் மோடி பங்கேற்று, மனமுருக இயேசுவை வழிபட்டார். இந்த நிகழ்வின் போது, நாட்டில் அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் நிலவ வேண்டும் என அவர் பிரார்த்தனை செய்ததாக தெரிவிக்கப்பட்டது. பிரதமரின் தேவாலய வருகை, மத நல்லிணக்கத்தையும், பன்முக பண்பாட்டையும்…
செஸ் போட்டியை தொடங்கி வைத்த LJK தலைவர்
புதுவை: புதுவை Hunters Queens Trophy முதல் இன்டர்நேஷனல் கிளாசிக் டூர்னமென்ட், புதுவை லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மற்றும் அவரது துணைவியார் குத்துவிளக்கு ஏற்றி, செஸ் போட்டியை தொடங்கி வைத்தனர். இந்த சர்வதேச அளவிலான கிளாசிக் செஸ் போட்டியில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டி தொடக்க விழாவில் விளையாட்டு ஆர்வலர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து…
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பெருவிழா: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
புதுச்சேரி:இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் கிறிஸ்துமஸ் பெருவிழா, புதுச்சேரி முழுவதும் கிறிஸ்தவ மக்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, மாநிலம் முழுவதிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. புதுச்சேரி மிஷன் வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜென்மராக்கனி ஆலயத்தில், கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, குழந்தை இயேசுவை தோளில் சுமந்தபடி ஆலயத்தை சுற்றிவரும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கடலூர்-புதுச்சேரி உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில்…
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் கொண்டாடப்படும் புகழ்பெற்ற ஆருத்ரா தரிசன விழா, இன்று கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. நடராஜர் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள கொடிமரத்தில், வேத மந்திரங்கள் முழங்கவும், பாரம்பரிய வாத்திய கருவிகள் இசைக்கவும் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இந்த புனித நிகழ்வை உத்சவ ஆச்சாரியார் சிவாநாத் தீட்சிதர் முன்னின்று நடத்தி, கொடியேற்றி வைத்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக, வருகிற ஜனவரி 2ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 3ஆம் தேதி,…
ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலர் பணியிடை நீக்கம்
சென்னை / கோவை: சென்னையிலிருந்து கோவைக்கு பயணித்த சட்டக்கல்லூரி மாணவிக்கு, ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் சேக் முகமத், பாதுகாப்பு பணிக்காக சென்னைக்கு சென்று விட்டு, கடந்த சனிக்கிழமை சென்னை-கோவை இன்டர்சிட்டி ரயிலில் கோவைக்கு திரும்பியுள்ளார். அதே ரயிலில், சென்னையில் சட்டக்கல்லூரியில் பயிலும் கோவையைச் சேர்ந்த மாணவி பயணம் செய்துள்ளார். ரயில் காட்பாடி அருகே வந்தபோது, மாணவியின்…
MGR | எம்ஜிஆர் நினைவு தினம்: மெரினாவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் மரியாதை
சென்னை: முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில், எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய அதிமுகவினர், அவரது கொள்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட…
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் – படக்குழு அறிவிப்பு
சென்னை: ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான காரணங்களையும் படக்குழு விளக்கியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவரின் 100-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது….


