உதயநிதி ஸ்டாலின் கைது.. பரபரப்பில் தமிழகம் | CM விஜய்

தஞ்சையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி விவகாரத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று கூறி, இந்த ஆர்ப்பாட்டம் சென்றுக்கொண்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி,
* முதல்வர் விஜய்யை குறுவை பாதிக்கப்பட்டதற்கு டம்மி முதலமைச்சர்தான்.
* விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் விஜய் இதுபற்றி வாய்திறந்து பேசவில்லை
* ஆட்சிக்கு 3 மாதங்கள் ஆகியும் பாஜக என்ற சொல்லைக்கூட உச்சரிக்காதவர்தான் இந்த முதலமைச்சர் விஜய் என்றெல்லாம் கடுமையாக விமர்சித்தார்.
அப்போது சில தொண்டர்கள் ஒரு நடிகையின் பெயரைச்சொல்லி கூச்சலிட்டனர். அதற்க்கு உதயநிதி அளித்த பதில் பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. எனவே தவெக மகளிரணி சார்பில் தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின்பேரில், 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தஞ்சை காவல்துறையினர், இன்று காலை அவரது வீட்டில் வைத்து உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர். அப்போது பேசிய அவர் எனது கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்; நான் பேசாதை வெட்டி ஒட்டி பொய் செய்தி பரப்புகின்றனர்; பொய் வழக்கு போட்டுள்ளனர். ”காவிரி விவகாரம் குறித்து நான் பேசிய அனைத்து விஷயங்களையும் திசை திருப்பிவிட்டு, இதனை பூதாகரமாக்கிவிட்டனர்” என்றும் கூறினார். இந்தக் கைதை கண்டித்து, திருச்சி, தேனி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உதயநிதி மீது வழக்கு எந்தெந்த பிரிவுகளில்?
*BNS 196 – பொது அமைதியை கெடுத்தல்
*BNS 192 – கலவரத்தை தூண்டும் வகையில் ஆத்திரம்
*BNS 79- பெண்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துதல்
*BNS 352- வேண்டுமென்றே ஒருவரே அவமதித்தல்
*BNS 296(b) ஆபாசமாக பேசுதல்
*BNS 351(2)- மிரட்டல்
*BNS 61- குற்றவியல் சதி
*பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு (4)
*தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67
எதிர்க்கட்சி தலைவரின் கைது குறித்து பலரும் கருதுத் தெரிவித்து வருகின்றனர்.
“எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை கைது செய்யும் அளவிற்கு அதிகாரத்தை முதலமைச்சர் விஜய் தவறாக பயன்படுத்துகிறார்” – கே.பி.முனுசாமி
“ஆங்கிலேயர் காலத்தில் வாய் பூட்டு என்ற ஒரு சட்டம் இருந்தது, அதற்கு இணையாக எதிர்க்கட்சிகளை முடக்கும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது” – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்.
“சட்டமன்ற கூட்டத்தொடரில் உதயநிதியை பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்” – கனிமொழி
திருமாவளவன் கண்டனம்
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசிய இரட்டை அர்த்த பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது – விசிக தலைவர் திருமாவளவன்
“எதிர்க்கட்சி தலைவர் கைதை தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும்” – திருமாவளவன் கண்டனம்
உள்ளிட்ட பலர் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

