தவெக அரசின் முதல் பட்ஜெட்… முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். இதில் கல்வி, விளையாட்டு, பெண்கள் நலன், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
🏫 10,000 அரசுப் பள்ளிகளில் ‘சூப்பர் CLEAN சூப்பர் CAMPUS’
அரசுப் பள்ளிகளில் ‘சூப்பர் CLEAN சூப்பர் CAMPUS’ திட்டம் செயல்படுத்தப்படும். முதற்கட்டமாக 10,000 பள்ளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.139 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
📚 பள்ளிப் பாடத்திட்டம் மறுசீரமைப்பு
தமிழ்நாட்டை கற்றல் வெளிப்பாடுகளில் முதன்மை மாநிலமாக உருவாக்கும் நோக்கில் பள்ளிப் பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படும். இதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
🚫 பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகள்
பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புகளும், தன்னார்வ குழுக்களும் அமைக்கப்படும். மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 10581 என்ற உதவி எண் பள்ளி வளாகங்களில் தெளிவாக காட்சிப்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
💻 கல்லூரி மாணவர்களுக்கு ‘வெற்றி மடிக்கணினி’ திட்டம்
கல்லூரி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ‘வெற்றி மடிக்கணினி’ திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
🏠 மாணவர் தங்கும் வசதிகளுக்கு சிறப்பு நோக்கு நிறுவனம்
மாநிலம் முழுவதும் மாணவர்களின் தங்கும் வசதிகளை மேம்படுத்த சிறப்பு நோக்கு நிறுவனம் (Special Purpose Vehicle) அமைக்கப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
🚲 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன சைக்கிள்கள்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் 5.32 லட்சம் மாணவர்களுக்கு நவீன சைக்கிள்கள் வழங்கப்படும். ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வசதிகளுடன் வழங்கப்பட உள்ள இந்த சைக்கிள் திட்டத்திற்கு ரூ.277 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
🤖 தொழிற்பயிற்சி நிலையங்களில் AI, Machine Learning
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர வழி கற்றல் (Machine Learning) ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய தொழிற்பிரிவு தொடங்கப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
🎯 SSC, RRB, IBPS தேர்வுகளுக்கு கூடுதல் பயிற்சி
அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் SSC, RRB, IBPS உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான கூடுதல் பயிற்சி வகுப்புகள் அமைக்கப்படும். இதற்காக ரூ.3.38 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
🥇 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள்
ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்வதை நோக்கமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் உருவாக்கப்படும். இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
🏃 இளம் விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி
விளையாட்டில் ஆர்வம் கொண்ட 8 முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
🏆 தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் நோக்கில் தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். இதற்காக ரூ.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
📖 அரசு நூலகங்கள் டிஜிட்டல் மயமாக்கல்
அரசு நூலகங்களை நவீன வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
💍 பெண்களின் திருமண உதவிக்கு ரூ.812 கோடி
பெண்களின் திருமண நாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
👵 12 மாவட்டங்களில் முதியோர் இல்லங்கள்
மாநிலத்தின் 12 மாவட்டங்களில் தலா ஒரு முதியோர் இல்லம் என மொத்தம் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். இதற்காக ரூ.6.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

