மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்: அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்

புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்!
இந்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த “மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027” திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளன. அமைச்சர் நமச்சிவாயம் தனது குடும்ப விவரங்களை பதிவு செய்து திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

மே 31-ஆம் தேதி வரை பொதுமக்கள், சுய-கணக்கெடுப்பு முறையின் மூலம் இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 33 முக்கிய கேள்விகளுக்கான தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. அனைத்து விவரங்களும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படுகின்றன.

இதன் இரண்டாம் கட்டமாக, ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை கணக்கெடுப்புப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடமிருந்து தகவல்களை நேரடியாக சேகரிக்க உள்ளனர். இந்த கட்டத்திலும் 33 கேள்விகள் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *