MLA ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் விரைவில் PPL போட்டிகள்!
சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் விரைவில் PPL போட்டிகள் நடைபெற உள்ளதாக பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.
பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்க செயலாளர் பாபு, பொருளாளர் துரைசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நிர்வாகிகள், 58 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்கத்திற்கு டெத் சான்றிதழ் வழங்குவதாகக் கூறியவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். தங்களை எதிர்ப்பவர்கள், வெளி மாநில வீரர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதாக குற்றம்சாட்டிய நிர்வாகிகள், எதிர்வினையாற்றுபவர்களால் அண்மையில் பெண் வீராங்கனை தற்கொலை செய்து கொண்டது குறித்து பதில் சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினர்.
புதுச்சேரி இளைஞர்களை இந்திய அளவிலான போட்டிகளில் விளையாட வைப்பதே, காமராஜ் நகர் எம்எல்ஏ ஜோஸ் சார்லஸ் மார்டினின் நோக்கம் எனவும், அவரது தலைமையில் விரைவில் PPL போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது லட்சிய ஜனநாய கட்சியின் பொதுச் செயலாளர் பிரபாகரன், ஜேசிஎம் மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான் குமார் மற்றும் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கலைமணி, சிவக்குமார், காமராஜ், மைக்கல், தாமோதரன், பிரபு (எ) தணிகமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

