Airtel பயனர்களுக்கு அதிர்ச்சி.. 4 முக்கிய பிளான்கள் நீக்கம்!
இந்தியாவில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோவுக்கு அடுத்தபடியாக 2-வது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ஏர்டெல் உள்ளது. இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஏர்டெல் சுமார் 32 முதல் 33 சதவீதமும், ஜியோ சுமார் 40 முதல் 41 சதவீதமும் சந்தைப் பங்கை கொண்டுள்ளன.
இந்நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை அவ்வப்போது உயர்த்தி வரும் நிலையில், ஏர்டெல் நிறுவனம் தனது சில ப்ரீபெய்ட் திட்டங்களில் மாற்றங்களை செய்துள்ளது.
அதன்படி, வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் தற்போது ரூ.349 திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டத்தின் கட்டணம் சுமார் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.
பழைய ரூ.299 திட்டத்தில் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.349 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
மேலும், ஏர்டெல் நிறுவனம் ரூ.579, ரூ.619 மற்றும் ரூ.649 ஆகிய மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களையும் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், ஜியோ நிறுவனமும் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற வாய்ஸ் கால்களுடன் ரூ.349 திட்டத்தை வழங்கி வருகிறது. இதனால், ஏர்டெல் மற்றும் ஜியோவின் ஒரே விலை திட்டங்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஏர்டெல் நிறுவனத்தின் திடீர் கட்டண மாற்றம் மற்றும் சில ப்ரீபெய்ட் திட்டங்களின் நீக்கம் மொபைல் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

