உலகநாயகனின் உரித்தான 67 ஆண்டு திரைப்பயணம் | ’67 YEARS OF KAMALISM’

உலகநாயகனின் உரித்தான 67 ஆண்டு திரைப்பயணம் | '67 YEARS OF KAMALISM'

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன், 1960ஆம் ஆண்டு வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். அந்த வகையில், திரைத்துறையில் நடிகராக தனது பயணத்தைத் தொடங்கி இன்றுடன் 66 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அவர், தற்போது 67வது ஆண்டு திரைப்பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.

பல ஆண்டுகளாக தனது தனித்துவமான நடிப்பு, புதுமையான முயற்சிகள் மற்றும் பரிசோதனை முயற்சிகள் மூலம் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார் கமல்ஹாசன். நடிகர் மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், நடனக் கலைஞர் என பல்வேறு துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ள அவர், எண்ணற்ற கதாபாத்திரங்கள் மற்றும் திரைப்படங்கள் வாயிலாக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

இந்நிலையில், கமல்ஹாசனின் 67வது ஆண்டு திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில், ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் “67 Years of Kamalism” என்ற வாசகத்துடன் சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய அவரது திரைப்பயணம் முதல் உலகநாயகனாக உயர்ந்தது வரையிலான முக்கிய தருணங்களை நினைவுகூரும் வகையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

பல தலைமுறைகளை கடந்து, இந்திய சினிமாவில் தனது தனித்துவமான முத்திரையை பதித்துள்ள கமல்ஹாசனின் 67 ஆண்டுகால திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *