இனி ஆன்லைனில் மதுபானம்! முன்பதிவு செய்யும் முறை இன்று அறிமுகம்…!

இனி ஆன்லைனில் மதுபானம்!

டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் புதிய நடைமுறையை தமிழ்நாடு அரசு கொண்டுவருகிறது.

அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் டாஸ்மாக் மதுபான வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நடைமுறை இன்று அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஆன்லைனில் எவ்வாறு முன்பதிவு செய்வது என்பது குறித்த செயல் விளக்கத்தை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இன்று முதல் அமல்!

தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் இன்று முதல் அமலுக்கு வருகிறது ஆன்லைன் வாயிலாக மதுபான விற்பனை

ஆன்லைனில் மதுபான விற்பனை

இதை தெரிஞ்சுக்கங்க!

ஆன்லைன் வாயிலாக மதுபான விற்பனை இன்று முதல் தொடக்கம்

TASMAC2E.IN என்கிற தளத்தில் தொகையை செலுத்தி முன்பதிவு செய்யலாம்

தேர்வு செய்த கடைக்கு நேரில் சென்றே மதுபானத்தைப் பெற இயலும்

ஆன்லைனில் முன்பதிவு செய்தாலும் 21 வயது நிறைவை உறுதி செய்வது அவசியம்

4,000க்கும் மேற்பட்ட கடைகளில் மது வகை இருப்பை நேரடியாக அறியலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *