மழைக்காலத்திற்குள் நடவடிக்கை: MLA ஜோஸ் சார்லஸ் மார்டின் உறுதி
காமராஜ் நகர் தொகுதியில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன் சீரமைப்பு பணிகளுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த தொகுதி எம்.எல்.ஏ. ஜோஸ் சார்லஸ் மார்டின் உறுதியளித்துள்ளார்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட ஜீவா நகர் பகுதியில் லட்சிய ஜனநாயக கட்சி தலைவரும், காமராஜ் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கால்வாய் சீரமைப்பு, கழிவுநீர் வெளியேற்ற வசதிகள் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, ஜீவா நகர் பகுதியில் மக்கள் செப்டிக் டேங்க் அடைத்து கொண்டிருப்பதாகவும், இதனால் அங்கு கழிப்பிட வசதி பிரச்சினையாக இருப்பதாக புகார் தெரிவித்தனர். புகார் தெரிவித்த அடுத்த அரை மணி நேரத்திற்குள் அங்கு செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனம் அனுப்பப்பட்டு உடனடியாக வேலை ஆட்களும் அனுப்பப்பட்டு அப்பிரச்சினை சரி செய்யப்பட்டது.
இதையடுத்து, வரவிருக்கும் மழைக்காலத்தை முன்னிட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, முடிந்தளவு அனைத்து பணிகளும் துரிதமாக நிறைவேற்றப்படும் என MLA ஜோஸ் சார்லஸ் மார்டின் மக்களுக்கு உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடங்களையும் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கழிப்பிடங்கள் எப்போதும் சுத்தமாகவும் சுகாதாரமான முறையிலும் பராமரிக்கப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிலையில், மக்களின் அன்றாட தேவைகள் மற்றும் சுகாதார வசதிகளில் அக்கறையுடன் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ ஜோஸ் சார்லஸ் மார்டினை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

