“நான் யார் என்பதை மறந்துவிட்டேன!அந்த உறவில் இருந்து வெளியே வந்ததே எனக்கு குணமடைதல்” – அனுபமா பரமேஸ்வரன்

‘பிரேமம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரன், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சினிமா மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருந்ததற்கான காரணத்தை அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

தான் இரண்டு ஆண்டுகளாக உடல் மற்றும் மன ரீதியாக கடுமையான வலியை அனுபவித்ததாகவும், ஒரு Narcissistic நபருடனான சிக்கலான உறவில் இருந்து மீண்டு வந்ததே தனது மௌனத்துக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த உறவில், தன்னை அறியாமலேயே தனது உடை, சமூக வலைதளப் பதிவுகள், உணவு பழக்கம் என ஒவ்வொன்றையும் அந்த நபர் கட்டுப்படுத்தியதாக அனுபமா கூறியுள்ளார்.

காதலிக்க ஆரம்பித்த மூன்றே மாதங்களில் திருமணப் பேச்சு தொடங்கியதாகவும், அந்த உறவு காதலைவிட தன்னை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணமாகவே இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘டிராகன்’ படத்தின் புரமோஷனில் கூட தான் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு அந்த உறவு தன்னை பாதித்ததாகவும், யாராவது தன்னை எப்படி இருக்கிறாய் என கேட்டாலே அழும் நிலையில் இருந்ததாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

“நான் என் மனதை திறந்து சொல்லாமல் தவறான முடிவு எடுத்திருந்தால், இன்று எனக்கு கிடைக்கும் அன்பு கிடைத்திருக்காது. எனக்காக நான் பேசவில்லை என்றால் யார் பேசுவார்கள்?” என அனுபமா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த அனுபவத்தை வெளிப்படையாகப் பகிர்வதன் மூலம், இதுபோன்ற உறவில் சிக்கியிருப்பவர்கள் தங்களது நிலையை புரிந்துகொள்ள வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *