“மொபைல் போனால் வந்த விபரீதம்..” நடிகை ஷகீலாவுக்கு நேர்ந்த அதிர்ச்சி!

மொபைல் போனை அதிக நேரம் பயன்படுத்துவது உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், நடிகை ஷகீலா தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

ஒருபக்கமாக படுத்துக்கொண்டு நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தியதால் கழுத்தில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஷகீலா தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சைக்காக சுமார் ரூ.3 லட்சம் வரை செலவானதாகவும், தற்போது கழுத்தில் பட்டை அணிய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தினமும் தொடர்ந்து பல மணி நேரம் செல்போனில் கேம்ஸ் விளையாடியதாகவும், பின்னர் யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நீண்ட நேரம் செலவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது எழுந்து நடப்பது, சாப்பிடுவது உள்ளிட்ட அன்றாட செயல்களுக்குக்கூட மற்றவர்களின் உதவி தேவைப்படுவதாகவும் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு அதிக நேரம் கேட்ஜெட்களை வழங்குவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என்றும் ஷகீலா வலியுறுத்தியுள்ளார்.

ஷகீலாவின் இந்த அனுபவம், அதிகப்படியான செல்போன் பயன்பாடு குறித்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ள செல்போனை அளவோடு பயன்படுத்துவது அவசியம் என்ற விழிப்புணர்வையும் இது ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *