செய்திகள்

தொடங்கியது இடைத்தேர்தல்.. மதுராந்தகம், தாராபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!

தொடங்கியது இடைத்தேர்தல்.. மதுராந்தகம், தாராபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் (தனி) தொகுதியில் 285 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 2,13,788 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,04,926 ஆண் வாக்காளர்களும், 1,08,797 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் 320 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் 2,23,306 வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் இ. பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் பி. சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

இடைத்தேர்தலை முன்னிட்டு இரு தொகுதிகளிலும் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக போலீசாருடன் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக இரு தொகுதிகளிலும் நடைபெற்ற தீவிர பிரசாரம் அக்டோபர் 4-ம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து இன்று பொதுமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *