“அன்பை மட்டுமே விதைப்போம்!” – ரசிகர்களுக்கு சூர்யா முக்கிய அறிவுரை!
தொடர்ச்சியான வெற்றிகளால் உற்சாகத்தில் இருக்கும் ரசிகர்களை நடிகர் சூர்யா நேரில் சந்தித்து, சமூக வலைதளங்களில் வெளியாகும் எதிர்மறையான பதிவுகளுக்காக தேவையின்றி சண்டையிட வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளார்.
ரசிகர்களுடனான சந்திப்பில் பேசிய சூர்யா, “அன்பை மட்டுமே விதைப்போம். சோசியல் மீடியாவில் எவனோ ஒரு முட்டாள் பதிவிட்டால், அவர்களுடன் நாம் போய் சண்டை போடத் தேவையில்லை. நம்முடைய வேலையை நாம் பார்ப்போம்; அவர்களுடைய வேலையை அவர்கள் பார்க்கட்டும். புரிந்துகொள்ளாதவர்களை நம்மால் மாற்ற முடியாது” எனக் கூறினார்.
மேலும், உலகம் வேகமாக மாறி வருவதாகவும், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும் குறிப்பிட்ட சூர்யா, ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த விஷயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
“உங்களுக்குப் பிடித்த விஷயத்தை தினம் தினமும் செய்துகொண்டிருங்கள். நிச்சயமாக உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பை மட்டுமே கொடுங்கள்” என்றும் அவர் அறிவுறுத்தினார்.
