கார்த்திக் சுப்பராஜ் மீது பொறாமைப்படுகிறேன்! – மணிரத்னம் ஓபன் டாக் !
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜை மனதார பாராட்டியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
கார்த்திக் சுப்பராஜ் ஒரு சிறந்த கலைஞர் என்றும், அவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றும் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
மேலும், இளம் தலைமுறை இயக்குநர்களை முன்னின்று வழிநடத்தக்கூடிய ஒரு தலைவராக கார்த்திக் சுப்பராஜ் உருவாகி வருகிறார் எனவும் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ திரைப்படம் குறித்தும் பேசிய மணிரத்னம், அது ஒரு சிறந்த படைப்பு என குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, கார்த்திக் சுப்பராஜின் தனித்துவமான திரைமொழியுடன் இளையராஜாவின் இசை இணைந்திருப்பது படத்தின் அனுபவத்தை மேலும் சிறப்பாக்குகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜின் படைப்பாற்றல் மற்றும் அவரது சினிமா பார்வையை பாராட்டி மணிரத்னம் பேசிய இந்த கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.
