சிவகார்த்திகேயனின் 27வது படம்.. இன்று மாலை வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய படங்களில் நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. தற்போது அவர் நடிக்கும் 27வது திரைப்படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
‘SK27’ எனத் தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. ‘பார்க்கிங்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார். சிவகார்த்திகேயனும் ராம்குமார் பாலகிருஷ்ணனும் இணையும் முதல் படம் என்பதால் இந்தக் கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இப்படத்தில் நடிகை கயாடு லோஹர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் படப்பிடிப்புப் பணிகளும் தொடங்கியுள்ள நிலையில், படத்தின் தலைப்பு அல்லது மற்ற முக்கிய விவரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று மாலை 5.27 மணிக்கு புதிய அப்டேட் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு படத்தின் அடுத்தகட்ட தகவல்களை வெளிப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
சிவகார்த்திகேயனின் புதிய கூட்டணி, படத்தின் தலைப்பு மற்றும் பிற விவரங்கள் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்
