செய்திகள்

#RIP நடிப்பு அரக்கன்..காலாவின் ஹரி தாதா.. – Nana Patekar நம்மை விட்டு பிரிந்தார்..!

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மாரடைப்பு காரணமாக கோவாவில் உள்ள மருத்துவமனையில் காலமானார்

காலா படத்தில் வில்லனாக நடித்தவரும் பொம்மலாட்டம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவருமான பிரபல இந்தி, மராட்டிய நடிகர் நானா படேகர் கோவாவில் இன்று மாரடைப்பால் காலமானார்.

கோவாவின் டோனா பவுலாவில் உள்ள அவரது இல்லத்தில் அவர் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் மருத்துவக் குழுவினர் சுமார் 45 நிமிடங்கள் அவருக்கு தீவிரச் சிகிச்சை (CPR) அளித்தும் பலனின்றி, அதிகாலை 5:20 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்தி மற்றும் மராத்தி திரையுலகில் மிகச் சிறந்த மற்றும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியவர் நானா படேகர். தனது அசாத்திய நடிப்பிற்காக மூன்று தேசிய திரைப்பட விருதுகளையும், 2013 ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நானா படேகர் திரைத்துறையை தாண்டி சமூக களத்திலும் மிக முக்கியமான மற்றும் தனித்துவமான பங்கினை ஆற்றியுள்ளார். பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை மறுசீரமைக்க அனுபூதி என்ற தொண்டு அமைப்பின் மூலம் நிதியுதவி வழங்கினார்.

பாட்ஷாலா திரைப்படத்தில் நடித்ததற்காக பெற்ற முழு சம்பளத்தையும் ஐந்து வெவ்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார். அவருக்கு வழங்கப்பட்ட ராஜ் கபூர் விருதுடன் கிடைத்த ரூ.10 லட்சம் பரிசுத்தொகையையும் மகாராஷ்டிராவில் வறட்சி நிவாரணப் பணிகளுக்காக முழுமையாக நன்கொடையாக அளித்தார்.

வறட்சியால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கும் அவர் நிதியுதவி செய்தார். 2015 ஆகஸ்டில் விதர்பா பகுதியைச் சேர்ந்த 62 விவசாயக் குடும்பங்களுக்கு தலா ரூ.15,000 வீதம் காசோலைகளை வழங்கினார். அதே ஆண்டு செப்டம்பரில் மராத்வாடாவின் லாத்தூர் மற்றும் உஸ்மானாபாத் மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 113 விவசாயக் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்தார்.

2015 செப்டம்பரில், மராத்தி நடிகர் மகரந்த் அனாஸ்புரே உடன் இணைந்து நாம் ஃபவுண்டேஷன் (Naam Foundation) என்ற அமைப்பைத் தொடங்கினார். மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவுவதும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், #IcareIsupport என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொண்டு, மகாராஷ்டிரா வறட்சி நிவாரணப் பணிகளுக்காக நிதி திரட்டுவதிலும் நானா படேகர் முக்கிய பங்காற்றினார். அவரது உயிரிழப்பு என்பது ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கும் , அவர் நின்ற சமூக மற்றும் போராட்டக் களங்களுக்கு பேரிழப்பு என்றால் அது மிகையல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *