ரஜினி, சூர்யா படங்களுடன் மோதலை தவிர்க்கும் தனுஷ்! தள்ளிப்போகும் ‘ஓம்’ திரைப்படம்!
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்: Chapter 1’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது

.
அக்டோபர் 16, 2026 அன்று படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தேதியில் படம் வெளியாகாது என தனுஷ் தெரிவித்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ அக்டோபர் 15-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு மறுநாளே ‘ஓம்’ திரைப்படம் வெளியாக இருந்தது.
இதனால் ஒரே நேரத்தில் பெரிய படங்கள் வெளியாவதைத் தவிர்க்கும் வகையில், ‘ஓம்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு தீபாவளி வெளியீட்டிலும் ‘ஓம்’ இடம்பெறாது என தனுஷ் தெரிவித்துள்ளார். சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த தேதியையும் தவிர்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
பெரிய படங்கள் ஒன்றுக்கொன்று புரிதலுடனும் மரியாதையுடனும் செயல்பட வேண்டும் என்றும், திரைத்துறையின் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தனுஷ் தெரிவித்துள்ளார்.
