ராஜ்கிரணுக்கு முன்ஜாமின்! 15 நாட்களுக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்தரவு
நடிகர் ராஜ்கிரணுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.
படம் ஒன்றில் நடிப்பதற்காக தயாரிப்பாளர் சரவணனிடம் இருந்து பெற்ற ரூ.40 லட்சத்தை திருப்பிக் கொடுக்கவில்லை என்ற புகாரின் அடிப்படையில் ராஜ்கிரண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், ராஜ்கிரண் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், ராஜ்கிரணுக்கு முன்ஜாமின் வழங்கி, 15 நாட்களுக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வழக்கின் விசாரணைக்கு ராஜ்கிரண் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.40 லட்சம் தொடர்பான இந்தப் புகார் வழக்கில், தற்போது ராஜ்கிரணுக்கு முன்ஜாமின் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
