செய்திகள்

“செமையாக ரசித்தேன்!”.. தமிழ் திரைப்படத்தை புகழ்ந்து தள்ளிய மாதவன்!

“செமையாக ரசித்தேன்!”.. தமிழ் திரைப்படத்தை புகழ்ந்து தள்ளிய மாதவன்!

தமிழ் திரையுலகில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘மோத ராத்திரி’ திரைப்படத்தை நடிகர் மாதவன் வெகுவாக பாராட்டியுள்ளார். படம் பார்த்த அனுபவத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள மாதவன், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ் திரைப்படத்தை முழுமையாக ரசித்ததாக தெரிவித்துள்ளார்.

ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அணில்குமார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் கதை, திருமணமான ஒரு தம்பதியை சுற்றி நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் மற்றும் குழப்பங்களை மையமாகக் கொண்டு நகர்கிறது.

படத்தை பார்த்த மாதவன், அதன் திரைக்கதை, காட்சிப்பூர்வமான கதைசொல்லல் மற்றும் நடிகர்களின் நடிப்பு ஆகியவற்றை வெகுவாக பாராட்டியுள்ளார். குறிப்பாக, படம் தன்னை நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் விட்டு சிரிக்க வைத்ததாகவும், பல காட்சிகளில் உற்சாகத்துடன் கைதட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், படத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ள மாதவன், அவர்களுக்கு மேலும் பல வெற்றிகள் கிடைக்க வாழ்த்தியுள்ளார்.

ஏற்கனவே கமல்ஹாசன், தனுஷ், சிலம்பரசன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் ‘மோத ராத்திரி’ படத்தையும் அதன் குழுவினரையும் பாராட்டியுள்ளனர். தற்போது மாதவனின் பாராட்டும் படக்குழுவினருக்கு கூடுதல் கவனத்தை பெற்றுத் தந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *