செய்திகள்

“என் வாழ்வின் மறக்க முடியாத தருணம்” – கமலை சந்தித்த சூரி நெகிழ்ச்சி

“என் வாழ்வின் மறக்க முடியாத தருணம்” – கமலை சந்தித்த சூரி நெகிழ்ச்சி

மதிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. மீனவர்களின் வாழ்க்கை, படகுப்போட்டி மற்றும் கடல் விளையாட்டுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை, சிறப்பான கேமரா பணிகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை பலமாக அமைந்துள்ளன.

டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’, சூரியின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக மாறியுள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், திரைப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வசூலைத் தாண்டி விமர்சன ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், சூரி மற்றும் ‘மண்டாடி’ படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து சூரி தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

“என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று. கமல் ஹாசன் சார், உங்களின் நிபந்தனையற்ற அன்பு, வலிமையான வார்த்தைகள் மற்றும் ஆசீர்வாதங்கள், எங்களது ‘மண்டாடி’ திரைப்படப் பயணத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளது” என சூரி தெரிவித்துள்ளார்.

மேலும், கமல்ஹாசன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் தனது சினிமா பயணத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் புதிய வெளிச்சத்தையும் அளித்துள்ளதாகவும் சூரி குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் பாராட்டும், சூரியின் நெகிழ்ச்சியான பதிவும் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *