செய்திகள்

17 நிமிஷம் தாமதமான படம்… நீதிமன்றம் சென்ற வழக்கறிஞர்!

17 நிமிஷம் தாமதமான படம்… நீதிமன்றம் சென்ற வழக்கறிஞர்!

ஹைதராபாத்தில் உள்ள PVR திரையரங்கில் திரைப்படம் பார்க்க சென்ற வழக்கறிஞர் ஒருவர், படம் தொடங்க வேண்டிய நேரத்தில் திரைப்படத்தை திரையிடாமல் தொடர்ந்து 17 நிமிடங்களுக்கு விளம்பரங்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால், சரியான நேரத்தில் திரைப்படத்தை தொடங்காமல் விளம்பரங்களை ஒளிபரப்பியது தொடர்பாக ஹைதராபாத் நுகர்வோர் நீதிமன்றத்தில் PVR நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், வழக்கறிஞருக்கு ரூ.75,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்க வரும் பார்வையாளர்களின் நேரத்தையும் நுகர்வோர் உரிமைகளையும் கருத்தில் கொண்டு சேவை வழங்க வேண்டும் என்பதையே இந்த வழக்கு கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *