செய்திகள்

“நான் கூலான அம்மாவாக இருப்பேன்!”.. எதிர்கால தாய்மை குறித்து மனம் திறந்த தமன்னா!

“நான் கூலான அம்மாவாக இருப்பேன்!”.. எதிர்கால தாய்மை குறித்து மனம் திறந்த தமன்னா!

நடிகை தமன்னா தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், எதிர்காலத்தில் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டால், எப்படிப்பட்ட தாயாக இருப்பீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த தமன்னா, தனது தாயார் தன்னை மிகவும் கண்டிப்பான அம்மாவாக இருப்பார் என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், அந்தக் கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தான் மிகவும் கூலான அம்மாவாக இருக்கவே விரும்புவதாக தெரிவித்த தமன்னா, தனது குழந்தைகளுடன் மிகவும் சகஜமாகவும், ஜாலியாகவும் பழக வேண்டும் என்பதே தனது ஆசை என கூறியுள்ளார். குழந்தைகளிடம் எப்போதும் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் தாயாக இருக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டிய நாளில் கூட, சில நேரங்களில் “இன்று பள்ளிக்கு போக வேண்டாம்… வீட்டிலேயே சந்தோஷமாக இருங்கள்” என்று சொல்லும் அளவுக்கு அவர்களுடன் நட்பாக இருக்க விரும்புவதாக தமன்னா தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு தாயாக இருப்பதுடன், அவர்களின் நல்ல தோழியாகவும் இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார். தாய்மை குறித்த தமன்னாவின் இந்த வெளிப்படையான கருத்துகள் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘புருஷன்’ திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். இதுதவிர, இந்தி திரையுலகிலும் பல படங்களில் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *