SK-வுக்கு இப்படியா நடக்கனும்..?? – திடீரென கைவிட்டு போன பிரபல இயக்குநரின் திரைப்படம்..!
சிவகார்த்திகேயனை வைத்து இயக்க இருந்த திரைப்படத்தை கைவிடுவதாக பிரபல இயக்குநர் அறிவித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சிவகார்த்திகேயனை இயக்க இருந்த திரைப்படத்தை கைவிடுவதாக பிரபல இயக்குநர் அறிவித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நடிகர் சிவகார்த்திகேயன் தன் 26-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, தாய் கிழவி திரைப்பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘சேயோன்’ எனப் பெயரிட்டுள்ளனர். மூன்றாம்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இப்படத்திற்கு முன்பே இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்தார். அதற்கான, சந்திப்புகள் நடைபெற்றதுடன் படப்பிடிப்பு குறித்த ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இருந்தும் கடந்த ஓராண்டாக பேச்சுவார்த்தையிலேயே இருந்தது. சேயோனுக்குப் பின் இவருடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.
தொடர்ந்து, கங்கை அமரன் நேர்காணலில் பேசிய போது, “ஒரு நடிகர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருந்தார். ஆனால், அந்த நடிகர் நடித்த படம் ஒன்று ஹிட் அடித்ததும் காத்திருக்க வைத்தார். அப்படத்திற்கு முன்பே கால்ஷீட் கொடுத்துவிட்டார். ஆனால், இப்படி செய்தது எங்களுக்குப் பிடிக்கவில்லை. அவர் காலை ஏன் நாம் பிடிக்க வேண்டும்? என வெங்கட் பிரபுவிடம் வேறு படம் பண்ணு எனக் கூறிவிட்டேன்” என்றார். மறைமுகமாக சிவகார்த்திகேயனைத்தான் சொல்கிறார் என இந்த விடியோ வைரலானது.

இந்த நிலையில், ”சிவகார்த்திகேயனுடன் திரைப்படம் சில காரணங்களால்தான் கைவிடப்பட்டது. வேறு ஏதாவது கதையில் அவருடன் இணைய வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக இயக்குவேன். தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம். என் சகோதரர் சிவகார்த்திகேயனின் சேயோனுக்கு வாழ்த்துகள். நானும் என் அடுத்த திரைப்பட பணிகளில் இருக்கிறேன்” என வெங்கட் பிரபு பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
