“மமிதா பைஜு நடிப்பு வேற லெவல்!” – எஸ்.ஜே.சூர்யா கொடுத்த சர்ப்ரைஸ் பாராட்டு!
தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகை மமிதா பைஜுவின் நடிப்பைப் பாராட்டியுள்ளார். இந்திய அளவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைகளைப் பற்றிக் கேட்கப்பட்டபோது, மமிதா பைஜு மற்றும் பாலிவுட் நடிகை ஆலியா பட் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்.
“சமீபகாலமாக அசத்துறாங்க!”
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எஸ்.ஜே.சூர்யாவிடம், ‘நடிப்பு அரக்கன்’ என்று அழைக்கப்படும் அவரைப் போல, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், “சமீபகாலமாக நம்ம மமிதா பைஜு பிரமாதமாக நடித்து வருகிறார். வட இந்தியாவில் ஆலியா பட் சிறப்பாக நடித்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
மமிதாவின் நடிப்புத் திறமையை எஸ்.ஜே.சூர்யா வெளிப்படையாகப் பாராட்டியிருப்பது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது
வெற்றிப் படங்கள் மூலம் கவனம் ஈர்க்கும் மமிதா!
மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி, தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மமிதா பைஜு. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர், தற்போது தமிழ் சினிமாவிலும் தனது தடத்தைப் பதித்து வருகிறார்.
இந்த ஆண்டு வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’, ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் ஈர்த்துள்ளார். மேலும், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யாவின் பாராட்டு!
நடிப்பில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியுள்ள எஸ்.ஜே.சூர்யா, மமிதா பைஜுவைப் பாராட்டியிருப்பது அவரது ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பல படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்துவரும் மமிதாவுக்கு, இந்தப் பாராட்டு மேலும் ஒரு அங்கீகாரமாக அமைந்துள்ளது.
