10 ஆண்டுகளை நிறைவு செய்யும் பிக்பாஸ் தமிழ் – பிரம்மாண்டமாக தொடங்கும் சீசன் 10!

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் விருப்பமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் தமிழ், தனது வெற்றிகரமான 10வது சீசனை கொண்டாட தயாராகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக ரசிகர்களை 100 நாட்கள் பொழுதுபோக்குடன் இணைத்து வரும் பிக்பாஸ், தொலைக்காட்சி மட்டுமின்றி டிஜிட்டல் தளங்களிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

10வது சீசனை முன்னிட்டு ‘கார்னிவிழா’ என்ற பிரம்மாண்ட பொழுதுபோக்கு கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்க்கும் சுவாரஸ்யம், பரபரப்பு மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் அனைத்தையும் இந்த சீசன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ன் லாஞ்ச் புரோமோவில், தொகுப்பாளர் விஜய் சேதுபதி, ரசிகர்களை இந்த பிரம்மாண்ட பொழுதுபோக்கு பயணத்திற்கு அன்புடன் வரவேற்கிறார்.

“இங்க ஒன்னு நினைச்சா… பத்து நடக்கும்” என்ற வாசகம், பிக்பாஸ் வீட்டில் நிகழவிருக்கும் எதிர்பாராத சம்பவங்களையும் பரபரப்பான திருப்பங்களையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

10வது சீசன், ‘கார்னிவிழா’ கொண்டாட்டம் மற்றும் 100 நாட்கள் இடைவிடாத பொழுதுபோக்கு என, இந்த சீசன் இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *