‘பத்ரி 2’ இயக்க ஆசை! விஜய் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஜேசன் சஞ்சய் சுவாரஸ்ய பதில்
இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய், தற்போது தனது முதல் படமான ‘சிக்மா’வின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம், விஜய் நடித்த எந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

‘போக்கிரி 2’ போன்ற மாஸ் ஆக்ஷன் படமா அல்லது ‘சச்சின் 2’ போன்ற காதல் கதையா என கேட்கப்பட்டபோது, ‘பத்ரி 2’ படத்தை இயக்க விரும்புகிறேன் என ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘பத்ரி’ படத்தில் ஒரு “சிக்மா உணர்வு” இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் ‘சிக்மா’ திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் சுதீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். எஸ். தமன் இசையமைத்துள்ளார்.
