“அப்பாவின் நற்பெயரை காப்பாத்தணும்!” – உருக்கமாக பேசிய ஜேசன் சஞ்சய்
முதலமைச்சர் விஜய் குறித்து அவரது மகன் ஜேசன் சஞ்சய் பேசியதாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற கருத்து தன்னை எவ்வாறு பாதித்தது என்ற கேள்விக்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், ‘The Pursuit of Happyness’ திரைப்படம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், போராட்டங்களை எதிர்கொண்டு சரியான விஷயங்களைச் செய்வது, மற்றவர்களை ஊக்குவிப்பது மற்றும் நம்பிக்கையுடன் இருப்பது போன்ற விஷயங்களை அந்தப் படத்திலிருந்து கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.

தொடர்ந்து தனது தந்தை குறித்து பேசிய அவர், தனது அப்பா தற்போது மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பதால், தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தைப் பற்றியும் அரசியல் ரீதியாகவும் சமூக வலைதளங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் வருவது இயல்புதான் என தெரிவித்தார்.

மேலும், குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் தான் கவனமாக இருக்க வேண்டும் என்றும், யாரையும் புண்படுத்தும் வகையில் எதையும் செய்யக் கூடாது என்றும் கூறினார்.
இதன் காரணமாக தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில எல்லைகளை வகுத்துக்கொண்டு வாழ்வதாக ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
