‘The Paradise’ எப்படி இருக்கு? நானியின் நடிப்பு மிரட்டலா? – முழு விமர்சனம்!
நானி, காயாடு லோஹர், மோகன் பாபு, ராகவ் ஜுயல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘The Paradise’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அடிமைத்தனத்தில் இருக்கும் சவாரி இன மக்களை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

நடிப்பைப் பொறுத்தவரை நானி தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக அவரது entry மற்றும் சில முக்கியமான காட்சிகளில் கொடுக்கப்பட்டுள்ள performance கவனம் ஈர்க்கிறது. இது நானிக்கு வித்தியாசமான முயற்சியாக இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.
நடிப்பைப் பொறுத்தவரை நானி தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக அவரது entry மற்றும் சில முக்கியமான காட்சிகளில் கொடுக்கப்பட்டுள்ள performance கவனம் ஈர்க்கிறது. இது நானிக்கு வித்தியாசமான முயற்சியாக இருப்பதாகவும் பார்க்கப்படுகிறது.

காயாடு லோஹரின் நடிப்பும் நன்றாக இருக்கிறது. ஆனால் அவரது கதாபாத்திரத்திற்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்து, writing-ஐ வலுவாக அமைத்திருக்கலாம் என்ற உணர்வு ஏற்படுகிறது. சில காட்சிகள் வேறு படங்களின் சாயலை நினைவுபடுத்தினாலும், அவரது performance பாராட்டும் வகையில் உள்ளது.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மோகன் பாபுவும் சிறப்பாக நடித்துள்ளார். இருப்பினும், அவரது கதாபாத்திரத்திற்கான writing இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்.
கதையைப் பொறுத்தவரை, புதிதான களம் இல்லை. அடக்குமுறைக்கு எதிராக போராடும் கதைக்களத்தை ஏற்கனவே பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். இந்தப் படமும் சில இடங்களில் KGF உள்ளிட்ட படங்களை நினைவுபடுத்துகிறது. குறிப்பாக அம்மா sentiment உள்ளிட்ட சில அம்சங்கள் அந்தப் படங்களுடன் ஒப்பிடப்படக்கூடிய வகையில் உள்ளன.

Screenplay-ல் முதல் பாதி சுவாரஸ்யமாக நகர்கிறது. படத்தை chapter-களாக பிரித்திருப்பது வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும், அந்தப் பிரிவுகளுக்கான காரணம் முழுமையாக புரியவில்லை. இரண்டாம் பாதியில் fight மற்றும் dance காட்சிகள் இடம்பெற்றாலும், எதிர்பார்த்த அளவுக்கு emotional connect ஏற்படவில்லை.
அதேநேரத்தில், technical aspects படத்தின் முக்கியமான பலமாக இருக்கிறது. Cinematography, frame composition மற்றும் scene staging ஆகியவை சிறப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக bus fight sequence, starting montage மற்றும் Aaya Sher பாடல் காட்சிகளில் camera work கவனம் ஈர்க்கிறது.
படத்தின் colour palette-ம் தனித்துவமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. Savari மக்கள் வசிக்கும் பகுதிகளில் dark shades பயன்படுத்தப்பட்டுள்ள நிலையில், villain-ன் white costume மற்றும் Nani-யின் colourful appearance ஆகியவை காட்சிகளுக்கு நல்ல contrast கொடுக்கின்றன.
Music மற்றும் BGM படத்தின் மற்றொரு பலமாக இருக்கிறது. Aaya Sher, Welcome to the Paradise ஆகிய பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன. குறிப்பாக interval-க்கு முன்பாக வரும் BGM காட்சியின் தாக்கத்தை அதிகரிக்கிறது.

மொத்தத்தில், நானியின் performance, BGM மற்றும் technical presentation படத்தின் plus-களாக இருக்கின்றன. அதேநேரத்தில், writing, emotional connect மற்றும் second-half screenplay ஆகியவற்றில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
