“பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு!” – D56 படத்தின் மாஸ் அப்டேட்
மதுரையில் தனுஷ் நடிக்கும் D56 படத்தின் பூஜை நடைபெற்றுள்ள நிலையில், படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இப்படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு, கிராமத்து வாழ்க்கை, உறவுகள், மோதல்கள் மற்றும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த மண் சார்ந்த கமர்ஷியல் படமாக D56 உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக நடிகர் தனுஷ் நேற்று மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்நிலையில், மதுரை மாரநாடு கருப்பணசுவாமி கோவிலில் இன்று நடைபெற்ற பட பூஜை நிகழ்வு தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அங்கு இடம்பெற்ற பேனரில் “Dhanush in D56 – A Tamil Arasan Pachamuthu Film” என்றும், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பெயரும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், படத்தின் டேக் லைனாக “பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தனுஷின் கதாபாத்திரம் மற்றும் படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
D56 படத்தில் எஸ்.ஜே.சூர்யா, உறியடி விஜயகுமார், ப்ரீத்தி முகுந்தன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், நடிகர் வடிவேலுவும் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷ் – வடிவேலு கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மண் சார்ந்த பின்னணியில் உருவாகும் இந்தப் படம், ஆக்ஷன் மற்றும் உணர்வுபூர்வமான கதையம்சம் கொண்ட RAW & RUSTIC கமர்ஷியல் படமாக இருக்கும் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
படத்தில் வன்முறை சார்ந்த காட்சிகள் அதிகமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சென்சார் சான்றிதழ் தொடர்பாகவும் பல்வேறு பேச்சுகள் எழுந்துள்ளன. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.
