‘மீசைய முறுக்கு 2’ பார்க்க வந்த ஆதி.. தியேட்டரில் திரண்ட ரசிகர்கள் கூட்டம்!
ஆதி திரையரங்கிற்கு வருவதாக தகவல் அறிந்ததும், ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டுள்ளனர். ஆதி காரில் வந்து திரையரங்கின் முன்பக்க நுழைவாயிலில் இறங்க முயன்றபோதும், ரசிகர்கள் காரைச் சூழ்ந்ததால் அவரால் கீழே இறங்க முடியவில்லை.
அதேபோல், பின்பக்க நுழைவாயிலிலும் ரசிகர்கள் கூட்டம் இருந்ததால், அங்கிருந்தும் இறங்க முடியாத சூழல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காரின் மேற்கூரையைத் திறந்து வெளியே வந்த ஆதி, ரசிகர்களைப் பார்த்து கையசைத்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கானா இசைக்கலைஞர்களின் வாழ்க்கை, அவர்களின் போராட்டங்கள் மற்றும் புறக்கணிப்புகளை மையமாகக் கொண்டு ‘மீசைய முறுக்கு 2’ உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் கானா இசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இசையமைப்பாளர் தேவாவும் படத்தைப் பார்த்து ஆதியை நேரில் பாராட்டியிருந்தார்.
தற்போது ரசிகர்கள் தியேட்டரில் ஆதியை சூழ்ந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
