‘Avengers: Endgame’ காட்சிகள் லீக்கா? லோகி, ஹல்க், 3,000 யுனிவர்ஸ்கள்… ‘Doomsday’ ரகசியம் இதுதானா?
மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘Avengers: Endgame: Encore’ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், படத்தின் புதிய காட்சிகள் எனக் கூறப்படும் சில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தக் காட்சிகள் அடுத்ததாக வெளியாகவுள்ள ‘Avengers: Doomsday’ படத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. ஆனால், இந்த வீடியோக்கள் உண்மையில் ‘Doomsday’ படத்தின் காட்சிகள்தானா என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
லீக் ஆனதாக கூறப்படும் ஒரு காட்சியில் Doctor Doom, Bruce Banner-ஐ சந்தித்து தன்னுடன் இணையுமாறு முயற்சிப்பதாகவும், அதன் பின்னர் Bruce Banner Hulk ஆக மாறுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், Doctor Doom தனது சொந்த முகமூடியை உருவாக்கும் காட்சியும் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் காட்சி, ‘Iron Man’ படத்தில் Tony Stark தனது முதல் சூட் மற்றும் ஹெல்மெட்டை உருவாக்கிய காட்சியை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மற்றொரு முக்கியமான காட்சியில் பல யுனிவர்ஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதையும், டைம்லைன்கள் அழிவதையும் காண்பிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக 3,000 யுனிவர்ஸ்கள் அழிக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனை ‘Avengers: Endgame’ படத்தில் Tony Stark கூறும் பிரபலமான “I love you 3,000” வசனத்துடன் ரசிகர்கள் தொடர்புபடுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ‘Endgame’ இயக்குநர்களான Russo Brothers, மீண்டும் படத்தை ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், புதிய காட்சிகள் தொடர்பான spoilers-ஐ வெளியிட வேண்டாம் என்றும் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
