செய்திகள்

ஒரு இயக்குநராக அப்பாவிடம் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான்!” – ஓபனாக பேசிய ஜேசன் சஞ்சய்

“ஒரு இயக்குநராக அப்பாவிடம் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான்!” – ஓபனாக பேசிய ஜேசன் சஞ்சய்

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜேசன் சஞ்சய். சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் வெளியீட்டையொட்டி ஜேசன் சஞ்சய் தொடர்ந்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் சமீபத்திய பேட்டியில், தனது தந்தை விஜய்யின் நடிப்பில் இயக்குநராக தனக்கு மிகவும் பிடித்த விஷயம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜேசன் சஞ்சய், விஜய்யின் நகைச்சுவை நடிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்தார்.

மேலும், நகைச்சுவைக் காட்சிகளில் விஜய் மிகவும் இயல்பாக நடிப்பார் என்றும், அவரது சொந்த குணத்தில் இருக்கும் சிறுபிள்ளைத்தனமான தன்மையை திரையில் வெளிப்படுத்தும் விதம் தனக்கு பிடிக்கும் என்றும் அவர் கூறினார்.

ஒரு இயக்குநராக விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவருக்குள் இருக்கும் இந்த நகைச்சுவை மற்றும் சிறுபிள்ளைத்தனமான பரிமாணத்தை இன்னும் அதிகமாக வெளிக்கொண்டு வர விரும்புவதாகவும் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *