விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘நூறு சாமி’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

கடந்த 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது . இந்தப் படத்துக்குப் பிறகு விஜய் ஆண்டனி – சசி காம்போ மீண்டும் இணைந்துள்ளது.இப்படத்திற்கு ‘நூறு சாமி’ என பெயரிடப்பட்டுள்ளது.

படத்தின் நாயகியாக சுவாசிகா நடித்துள்ளார்.இவர்களுடன் அஜய் திஷான், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்துள்ளார்.

அண்மையில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது .ஜூன் 19-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாக படக்குழு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *