கடைசி விவசாயி, கொட்டுக்காளி வரிசையில் டோரதி!”.. கார்த்திக் சுப்புராஜை பாராட்டிய மிஷ்கின்!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், இயக்குநர் மிஷ்கினும் இப்படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
‘டோரதி’ திரைப்படத்தைப் பார்த்த மிஷ்கின், இப்படம் தன்னை மிகவும் பாதித்ததாகவும், பல முக்கியமான விஷயங்களைப் பற்றி சிந்திக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பெண்கள் மற்றும் திருநங்கைகள் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினைகளை படம் உண்மையாகப் பேசியிருப்பதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் சிறந்த தமிழ் படங்கள் குறித்து மிஷ்கின் முன்பும் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ‘கடைசி விவசாயி’, ‘கொட்டுக்காளி’ ஆகிய படங்களை சிறந்த படங்களாக அவர் குறிப்பிட்டிருந்தார். ‘கொட்டுக்காளி’ படத்தின் முடிவு மற்றும் அதன் காட்சியமைப்பையும் அவர் வெகுவாக பாராட்டியிருந்தார்.
இந்நிலையில், தற்போது அந்த வரிசையில் ‘டோரதி’ திரைப்படத்தையும் சேர்ப்பதாக மிஷ்கின் தெரிவித்திருப்பது, படக்குழுவினருக்கு கிடைத்த முக்கியமான பாராட்டாக பார்க்கப்படுகிறது.
மேலும், கார்த்திக் சுப்புராஜின் ஒவ்வொரு காட்சியமைப்பையும் பாராட்டிய மிஷ்கின், இந்தப் படம் தன்னை மீண்டும் திரைப்படம் இயக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். ‘டோரதி’யை பல முறை பார்க்கப் போவதாகவும், மற்றவர்களையும் இப்படத்தை பார்க்கச் சொல்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
