செய்திகள்

Meesaya Murukku 2’ – இந்த முறை ஆதி சொல்ல வந்தது என்ன?

Meesaya Murukku 2’ – இந்த முறை ஆதி சொல்ல வந்தது என்ன?

ஹிப்ஹாப் ஆதி, கெட்டிகா சர்மா, ஹர்ஷத் கான், யோகி பாபு, பாபா பாஸ்கர், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘Meesaya Murukku 2’ திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாடகராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் கதாநாயகன், தனது இலக்கை அடைகிறார் என்பதுதான் படத்தின் மையக்கரு. இந்தக் கதையை மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஹிப்ஹாப் ஆதி.

நடிப்பு எப்படி?

படத்தில் ஹிப்ஹாப் ஆதி மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் வித்தியாசம் காட்ட முயற்சி செய்திருக்கும் நிலையில், குறிப்பாக Gen Z கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு கவனம் பெறுகிறது.

ஹர்ஷத் கானின் comedy படத்தின் முக்கியமான பலமாக அமைந்துள்ளது. அவரது வழக்கமான fun-filled performance பல காட்சிகளில் நன்றாக work ஆகியுள்ளது. கெட்டிகா சர்மா, பாபா பாஸ்கர், கருணாஸ், யோகி பாபு உள்ளிட்டோரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நடித்துள்ளனர்.

படத்தின் முக்கியமான விஷயம் என்ன?

ஒரு பாடகராக வேண்டும் என்ற கனவை மையமாகக் கொண்டிருந்தாலும், படம் nepotism குறித்தும் முக்கியமாக பேசுகிறது. குறிப்பாக முதல் பாகத்தைவிட இந்தப் படத்தில் அந்த விஷயம் இன்னும் அழுத்தமாகவும், bold-ஆகவும் கையாளப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Making எப்படி?

மூன்று காலகட்டங்களையும் தனித்தனியாக establish செய்திருக்கும் விதம் கவனம் பெறுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் வித்தியாசமான presentation கொடுத்துள்ளனர்.

காட்சிகளை தேவையில்லாமல் நீட்டிக்காமல், ஒரு scene-ல் இருந்து அடுத்த scene-க்கு smooth-ஆக நகர்த்தியிருப்பது படத்தின் வேகத்திற்கு உதவுகிறது. இறுதியில் மூன்று காலகட்டங்களையும் connect செய்திருக்கும் விதமும் குறிப்பிடத்தக்கது.

Technical aspects

Cinematography மற்றும் editing படத்தின் கதைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன. Transitions smooth-ஆக இருப்பதுடன், camera work-ம் கதையின் mood-க்கு பொருத்தமாக இருக்கிறது.

படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக music இருக்கிறது. மூன்று காலகட்டங்களுக்கும் ஏற்றவாறு இசையில் variation கொடுத்துள்ளனர். பாடல்கள் மற்றும் BGM இரண்டும் கவனம் பெறுகின்றன. குறிப்பாக emotional scenes-ல் இசை பயன்படுத்தப்பட்ட விதம் சிறப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *