நடிப்புக்காக 3வது National Award – குடியரசுத் தலைவரிடம் பெற்றுக் கொண்டார் Dhanush

கேப்டன் மில்லர் திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் விருதை பெற்றுக் கொண்டார் நடிகர் தனுஷ்

72-வது தேசியத் திரைப்பட விருதுகள் முன்பே அறிவிக்கப்பட்டது. வழக்கம் போல டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் விருது விழா முதல்முறையாக டெல்லியிலிருந்து மாற்றப்பட்டு குஜராத் மாநிலம் ஏகதா நகரில் நடைபெற்றது.

இதில், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி வருகிறார்.

இதில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 2024-ல் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார். தேசிய சமூக சுற்றுச்சூழல் பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. மேலும், தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதுக்குத் தேர்வாகியுள்ளது. அதற்காகவும் தனுஷ் விருதினை பெற்றார்.

இதன்மூலம் சிறந்த நடிகருக்காக மட்டும் தனுஷ் இதுவரை 3 விருதுகளையும் தயாரிப்பாளருக்காக 2 விருதுகளையும் தற்போது ராயன் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநர் விருது என மொத்தமாக 6 விருதுகளை தனுஷ் தனது கைவசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *