செய்திகள்

365 நாட்கள்.. ‘இட்லி கடை’ நினைவுகளை மீண்டும் கொண்டாடிய படக்குழு!

365 நாட்கள்.. ‘இட்லி கடை’ நினைவுகளை மீண்டும் கொண்டாடிய படக்குழு!

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘இட்லி கடை’ வெளியாகி தற்போது ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி படக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு வீடியோ, சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தனுஷின் 52-வது படமாக உருவான ‘இட்லி கடை’ கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தனுஷுடன் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

குடும்ப உறவுகள், பாசம் மற்றும் சொந்த ஊருடனான பிணைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தின் கதையில், வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பும் தனுஷ் தனது தந்தை நடத்தி வந்த இட்லி கடையை ஏற்று நடத்துகிறார்

இந்நிலையில், படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக படத்தின் முக்கிய காட்சிகள் மற்றும் நினைவுகளை தொகுத்து படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. “365 days of flavours, smiles, memories, and so much love” என்ற பதிவுடன் வெளியான இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கும் ரசிகர்கள் மத்தியில் கவனம் கிடைத்திருந்தது. குறிப்பாக, ‘எஞ்சாமி தந்தானே’ உள்ளிட்ட பாடல்கள் வெளியானபோதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள நிலையில், ‘இட்லி கடை’ படத்தின் நினைவுகளை மீண்டும் ரசிகர்களிடம் கொண்டு சென்றுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *